படம் : பாம்பாட்டம்
நடிப்பு: நான் அவன் இல்லை ஜீவன், மல்லிகா ஷெராவத், சுமன் ரித்திகா சிங்,யாஷிகா ஆனந்த், சாய் பிரியா,
தயாரிப்பு: வைத், பிலிம் கார்டன் பழனிவேல்
இசை: அம்ரிஷ்
இயக்கம்: வடிவுடையான்
பி ஆர் ஓ : மவுனம் புவன்
ராணி மங்கம்மா (மல்லிகா ஷெராவத்) ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறார். அங்கு வரும் ஜோதிடர் ஒருவர் நீங்கள் நாகத்தால் தீண்டி இறப்பீர்கள் என்று சொல்ல கோபமடையும் மங்கம்மா தேவி ஜோதிடரை சிறையில் அடைக்கிறார். இதற்கிடையில் மகாராணிக்கு குழந்தை பிறக்கிறது. ஜோதிடர் சொன்னபடி தான் பாம்பு கடித்து சாகவில்லை என்ற ஆணவத்தில் சிறைக்கு சென்று ஜோதிடரை கொல்லப் போவதாக சொல்கிறார். அதே நேரம் அரண்மனைக்குள் ராட்சத நாகம் புகுந்து விட்டதாக காவலாளி கதற அதைக் கொல்ல ராணி மங்கம்மா வாளுடன் செல்கிறார். ஆனால் நாகம் தீண்டி ராணி இறக்கிறார். அதன் பிறகு அவரது ஆவி அங்கு நடமாடுவதாக வதந்தி பரவி யாரும் அரண்மனைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அரண்மனையில் உள்ள பொக்கிஷத்தை கொள்ளையடிக்க வரும் திருடர்களும் நாகத்தால் கொல்லப்படுகின்றனர். ஆனால் அந்த இடத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று எண்ணி போலீஸ் அதிகாரி ஜீவன் அரண்மனைக்கு சென்று கண்டுபிடிக்க எண்ணுகிறார். ஆனால் அவரது மகன் தந்தைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதால் அவரை கடத்தி ஒரு அறையில் கட்டி போட்டு வைத்து விட்டு தான் அந்த இடத்துக்கு செல்கிறார். அரண்மனைக்குள் துணிச்சலாக நுழையும் அவர் ராணி மங்கம்மா ஆவியிடம் இருந்து தப்பினாரா , ராட்சத நாகம் அவரை என்ன செய்தது அல்லது ராட்சத நாதத்தை இவர் என்ன செய்தார் என்ற மர்மங்களுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
இயக்குனர் வடிவுடையான் இயக்கம் என்றாலே அது கமர்சியல் பின்னணியில் கலந்து தான் இருக்கும். இந்த படமும் அந்த வகையில் ராணி கதை, போலீஸ் கதை, ராட்சத நாக கதை என்று மூன்று கலவையும் கலந்து பொழுது போக்கான ஒரு படத்தை தந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
விட்டலாச்சாரியா படங்கள் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த காலகட்டங்களை ஞாபகப்படுத்தும் வகையில் பாம்பாட்டம் படம் உருவாகி இருக்கிறது.
நான் அவன் இல்லை , திருட்டுப் பயலே போன்ற படங்களில் நடித்த ஜீவன் இடைப்பட்ட காலத்தில் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை திடீரென்று பாம்பாட்டம் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக் கிறார். மகன் வேடத்தில் இருக்கும் ஜீவனை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டாலும் தந்தை கெட்டப்பில் இருக்கும் ஜீவனை அடையாளம் காண நேரம் அதிக மாகிறது.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஜீவன் தொடக்க காட்சியிலேயே பயங்கரமான ரவுடி என்று கூறப்படுபவரை நேருக்கு நேர் சந்தித்து என்கவுண்டர் செய்வது ஷாக் தருகிறது.
தந்தை மீது விழும் கொலை பழியை தான் ஏற்றுக்கொண்டு சிறையில் இருக்கும் இன்னொரு ஜீவன் அதாவது மகன் ஜீவன் அந்த சிறையில் உடன் இருக்கும் அரண்மனை தளபதி கூறும் ராஜ நாக கதையை கேட்டு அந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நேரடியாக அரண்மனைக்கு செல்கிறார். ஏற்கனவே பல உயிர்களை பலி வாங்கிய ராட்சத நாகம் இருக்கும் அரண்மனைக்குள் வில் அன்புடன் ஜீவன் நுழைவதும் அவர் எதிரே ராஜ நாகம் தலையை நீட்டிக் கொண்டு வருவதும் படபடப்பை ஏற்படுத்துகிறது.ஆ னால் ஜீவன் விடும் அம்பில் அடிபட்டு அந்த பாம்பு ஓடி மறைகிறது.
இந்நிலையில் அரண்மனையில் காலம் காலமாக அடைந்து கிடக்கும் இளவரசி காலில் பூட்டப்பட்ட சங்கிலியுடன் நடந்து வந்து தான் எப்படி பாதாள சிறையில் அடைபட்டேன் என்று ஜீவனிடம் கூற அவரை ஜீவன் விடுவிக்க எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஆகஷான் காட்சிகளாக அனல் பறக்கிறது.
மல்லிகா ஷெராவத் ராணி மங்கம்மா தேவியாக வருகிறார். தோரணையாக பேசி பயமுறுத் தலை ஏற்படுத்துகிறார். மல்லிகா ஷெராவத் நடிக்கிறார் என்றவுடன் அவரது கவர்ச்சி ஆட்டம் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும், ஆனால் இதில் ராணி மங்கம்மா வாக நடித்து கவர்ச்சிக்கு இடமில்லாமல் செய்து ரசிகர்களை வஞ்சித்து விடுகிறார்.
சுமன் போலீஸ் கமிஷனராக வருகிறார்.
மேலும் ரித்திகா சிங், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
வைத்தியநாதன், பிலிம் கார்டன் பழனிவேல் தயாரித்திருக் கிறார்கள்.
அம்ரிஷ் இசை அமைத்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை அரங்கில் யாரையும் கண் அசர விடாமல் அடி பின்னி எடுக்கிறார்.
உண்மைச் சம்பவம் , மர்ம கொலைகள் என்று எந்த வாய் ஜாலங்களும் இல்லாமல் சினிமாவை சினிமாவாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் வடிவுடையான்.
பாம்பாட்டம் – கமர்சியல் பிரியர்களுக்கு.