Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இருமொழிகளில் தயாராகும் ராஜலிங்கா..

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களை திருச்சி, தஞ்சை, விநியோக பகுதிகளில் வெளியிட்ட நிறுவனம் நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் இந்நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ராஜலிங்கா

நியு RSM பிலிம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் திருச்சி மாரிமுத்து தமிழ் – தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் ராஜலிங்கா படத்தில் கதைநாயகனாக ஷிவபாரதி அவருக்கு ஜோடியாக ஜாய் பிரியா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் மாறன்பாண்டியன், குமரேசன் ராஜேஷ், ரோடிஷா, தியா, அரிகரன் ஆகியோர் நடிக்கின்றனர்

ராஜலிங்கா படத்தின் ஒளிப்பதிவாளராக – சத்யகண்ணன், படத்தொகுப்பு:செந்தில் கருப்பையா, ஸ்டண்ட் மாஸ்டராக மிரட்டல் ஸெல்வா நடனம்: ஆண்டோ தாஸ், சரண் பாஸ்கர், இசை : வல்லவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்

இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதிதஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றியவர்
படம்பற்றி இயக்குநர் ஷிவபாரதி கூறியதாவது….
இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன் அழகை பார்த்து காதல்வயப்படும் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முன் வரம்புமீறி நடப்பதால் பெற்றோர்களுக்கும், பொது சமூகத்துக்கும் ஏற்படும் நெருக்கடியை பேசுகிறது இப்படம் ஒரு காலத்தில் சமூகத்தில் நடக்கும் கொலை,கொள்ளை சம்பவங்களுக்கு தமிழ்சினிமா மீது பழி போடப்பட்டது இன்றைக்கு உலகம் கையடக்க கைபேசிக்குள் அடங்கி போனது இதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் மனித சமூகத்துக்கு எதிரான செயல்களுக்கு எதிராகவே அதிகம் பயன்படுத்தபடுகிறது அப்படி ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் காதல் ஜோடியை பற்றிய கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன் என்றார்


திருச்சி ஏரியாவில்கடந்த 30 ஆண்டுகளை கடந்து விநியோகத்துறையில் இருக்கும்
திருச்சி மாரிமுத்து ராஜலிங்காபடத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ராஜலிங்கா பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:

இயக்குனர் ஷிவபாரதி கூறிய கதை இன்றைய கைபேசி கலாச்சாரத்தையும், அதனால் ஏற்படும் சமூக அவலம், பாதிப்பை கண்முன்னால் நிறுத்தியது அதனால் தமிழில் தயாரிப்பாது என்று படப்பிடிப்பை தொடங்கினோம் படத்தின் கதையை கேட்டதெலுங்கு திரைப்பட துறை விநியோகஸ்தர்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் ரசிகர்களை கவரும் என கூறியதால் இரு மொழியிலும் ராஜலிங்கா படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம் சென்னை, ஹைதராபாத், விசாகபட்டினம், கொடைக்கானல் அடர்ந்த வனப்பகுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது இதில் பிரபலமான தெலுங்கு நடிகரை கௌரவ வேடத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது ராஜலிங்கா படத்தின் தெலுங்கு படத்தின் முதல் பார்வை சிவன் ராத்திரி அன்று வெளியிட உள்ளோம்.

இவ்வாறு தயாரிப்பாளர்  திருச்சி மாரிமுத்து  கூறினார்

Related posts

ரைட் (பட விமர்சனம்)

Jai Chandran

Actor Pandu passes away Due to COVIT19

Jai Chandran

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி:. விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend