படம்: சங்கத்தலைவன்
நடிப்பு: சமுத்திரக்கனி, கருணாஸ், சோனு லட்சுமி, மாரிமுத்து,
கதை: பாரதிநாதன்
தயாரிப்பு: வெற்றி மாறன், உதயகுமார்
இசை: ராபர்ட் சற்குணம்
ஒளிப்பதிவு: சீனிவாசன் தேவாம்சம்
இயக்கம்: மணிகண்டன்
விசைத்தறி தொழிலாளர்களின் அவல வாழ்க்கையும். முதலாளிகளின் அராஜக போக்கையும் விவரிக்கும் கதை. கருணாஸ் தந்தையிடம் கோபித்துக்கொண்டு மாரிமுத்துவின் விசைத் தறி மில்லில் வேலை செய்துக் கொண்டு நண்பரின் கடையில் இரவில் தங்குகிறார். மாரி முத்துவுக்கு நம்பிக்கையான வராக இருக்கிறார் கருணாஸ். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் சோனு லட்சுமி. இவர் மாரிமுத்துவின் அண்ணன் மகள். விசைத் தறி சுழன்றுக் கொண்டிருக்கும் போது அதில் ஒரு பெண்ணின் கை சிக்கி துண்டாகிறது. இதிலிருந்து பிரச்னை தொடங்குகிறது, யாருக்கும் தெரியாமல் விஷயத்தை முடிக்கப்பார்க்கிறார் மாரி முத்து. ஆனால் கருணாஸ் மனம் பொறுக்காமல் இந்த விஷயத்தை சங்க தலைவர் சமுத்திரக்கனியிடம் சொல் கிறார். அவர் சங்க ஆட்க ளுடன் வந்து மாரிமுத்துவை தட்டி கேட்டு நஷ்ட ஈடு பெற்றுதருகிறார். சமுத்திரக் கனியிடம் இந்த விஷயத்தை சொன்னவர் கருணாஸ்தான் என்பதை தெரிந்து கொண்ட மாரிமுத்து அவரை வேலையை விட்டு விரட்டுவ துடன் போலீசிலும் சிக்க வைக்கிறார். அவரை காப் பாற்ற முன்வந்து நிற்கிறார் சமுத்திரக்கனி. ஒரு கட்டதில் சமுத்திரக்கனி சிறைக்கு சென்றுவிட தொழிலாளர் களின் சம்பள உயர்வுக்காக கருணாஸே தலைமை ஏற்று போராட்டம் நடத்துகிறார். இந்த மோதல் பெரும் பிரச்னையாக வெடிக்கிறது. இதன் முடிவு என்ன என்ப தற்கு சங்கத் தலைவன் கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது.
கம்யூனிஸ தத்துவங்கள் பல படங்களில் குறிப்பாக எல்லா பெரிய ஹீரோக்கள் படத்தி லும் பேசப்பட்டாலும் அது கம்யூனிசம் என்ற பெயரில் வெளிப்படாமல் ஹீரோவின் இமேஜ் பில்டப்பாக வெளிப் படும். தொழிலாளர்கள் நலன் பற்றி பேசாமல் எந்த ஹீரோ வும் நடிப்பதில்லை. சங்கத் தலைவன் படமும் இதைத் தான் பேசுகிறது ஆனால் கம்யூனிஸ முத்திரை யுடன் பேசுகிறது.
சமுத்திரக்கனி சிவப்பு சட்டை அணிந்து அசல் கம்யூனிஸ்ட் வாதியாகவே வாழ்ந்து காட்டு கிறார். தொழிலாளருக்கு எதிரான போக்கு நடக்கிறது என்று தெரிந்தால் அதற்கு காரணமான முதலாளியை அடித்து விரட்டும் கோபம், கை இழந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு தர மறுக்கும் மாரிமுத்துவை சட்டையை பிடித்து உலுக்கி நியாயம் கேட்கும் ஆக்ரோஷம் என படம் முழுவதும் அனல் பறக்க வைக்கிறார்.
கருணாஸ் கதாபாத்திரம் யூகிக்க முடியாதளவுக்கு டுவிஸ்ட்டாக உருவாக்கப் பட்டிருக்கிறது. சமுத்திரக் கனியை நேரில் பார்த்ததும் தன்னையும் சங்கத்து ஆள் என்று எண்ணிவிடுவார்களோ என்ற பதற்றப்படும் கருணாஸ் ஒரு கட்டத்தில் சமுத்திரக் கனியை போன்ற சங்கத் தலைவனாகி முதலாளி களிடம் தட்டிக்கேட்டு நியாயம் கேட்பது பரபரப்பு.
இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அப்பாவியாக, பயந்த சுபாவ முள்ளவராக அளவான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாப்பாத்திரமாக மாறி யிருக்கும் கருணாஸ் தொழி லாளர் வேலை நிறுத்தத்தை நடத்திக்காட்டி சிவப்பு சிந்தனையாளனாக இணைத் திருக்கிறார்.
மாரிமுத்துவின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் சோனு லட்சுமி, கருணாஸின் அனுதாபி ஆகிவிடுகிறார். அவருக்கு சாப்பாடு தருவது, காதலை சொல்வதுமாக தனது நடிப்பை அளவோடு வெளி யிட்டு கவர்கிறார். சமுத்திரக்கனியின் மனைவி யாக வரும் ரம்யா சோடை போகவில்லை. மாரிமுத்து விசை நெசவு தொழில் அதிப ராக பிடிவாத நடிப்பை வெளி யிட்டிருக்கிறார்.
இயக்குனர் வெற்றி மாறன் உதயகுமார் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சிவப்பு சிந்தனை தெறிக்கும் விதமாக அடித்தே நியாயம் பேசி இருக் கிறார் இயக்குனர் மணி கண்டன். சில வசனங்கள் சென்சார் கத்தரிக்கு தப்பி வந்திருப்பது ஆச்சர்யம். பளீர் விளக்குபோட்டு காட்சிகலை சினிமாவாக காட்டமல் இயற்கை பதிவாக வெளிக் காட்டியிருப்பது பலம். இசை அமைப்பாளர் சிவப்பு சிந்தனை பாடல்களுக்கு இசை அமைத்து கவனிக்க வைக்கி றார்.
’சங்கத்தலைவன்’ தட்டிக் கேட்பான்.