Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய நாளில் 5மில்லியன் பார்வை கடந்தது..

ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது!*

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.

திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.

உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

*நடிகர்கள்:* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

இசை: தமன் எஸ்.,
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்,
படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்.,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: ஹரிஹரசுதன்,
ஆடியோ உரிமம்:சரிகம

Related posts

மலையாள திரையுலகில் பிரமாண்ட படம் தயாரிக்கும் லைகா சுபாஸ்கரன்

Jai Chandran

யாஷ் டாக்ஸிக் படத்தில் JJ 45 நாள் சாகசம்

Jai Chandran

‘சூரியபுத்ரா மகாவீர் கர்ணன்’ இசை இயக்குனர் கே.பி.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend