ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெ யின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள் ளார். இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா சென்னை யில் நடந்தது. இயக்குனர் கஸ்தூரி ராஜா இசை வெளியிட்டார்.
பிறகு அவர் பேசியதாவது:
ரவாளி படத்தின்இசை வெளி யீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி. இப்படத்தின் இயக்குனர் ரவி ராகும் நான் 30 வருடத்துக்கு முன் நான் இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே படத்தில் ஹீரோவாக நடித்தவர். அவர் வந்து இந்த விழாவுக்கு அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை.
வெளியூர் செல்ல விருந்த நிகழ்ச்சியை தள்ளி வைத்துவிட்டு இங்கு வந்தேன். 30 வருடமாக ரவி ராகுல் ஈடுபாடு மாறாமல் சினிமாவில் இருக்கிறார். சினிமாவை உண்மையாக நேசிப்ப வர்களை சினிமா கைவிடாது.
ரவாளி பட டிரெய்லர், 2 பாடல்கள் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக் கிறது. சித்தார்த், நைரசா புதுமுகங்கள்போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்தவர்கள்போல் நடித்திருக்கிறார்கள்.
நான் இயக்கும் படங்களில் புதுமுகங்களைத்தான் நடிக்க வைப்பேன். ரஜினி , கமல், தனுஷ், சிம்பு எல்லோருமே புதுமுகங் களாக அறிமுகமானவர்கள்தான். எல்லோருமே சின்ன படங்களில் முதலில் நடித்தவர்கள்தான். சினிமாவை இன்றும் வாழவைத் துக்கொண்டிருப்பது சின்ன பட்ஜெட் படங்கள்தான்.
பெரிய ஹீரோவை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஹீரோ கால்ஷீட்டுக்காக 4 வருடம் கூட காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் அந்த இடைவெளியில் சிறிய படங்களை தயாரிக்க லாம். பெரிய படங்களின் வியாபாரம் நான்கைந்து பேர்களோடு முடிந்து விடுகிறது. சிறிய படங்கள் அப்படியல்ல. ஒரு சிறிய பட படப்பிடிப்பு நடந்தால் 100 குடும்பங் கள் பிழைக்கின்றனர். புது நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் வாழ்கிறார்கள். சிறிய படங்களை ரசிகர்கள் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் ரவாளி படம் வெற்றி அடையவும் அதில் நடித்துள்ள வரகள் வெற்றிபெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நிகழ்ச்சியில் நான் எழுதி பாமர இலக்கியம் என்ற புத்தகத் தை எல்லோருக்கும் அளித் தார்கள். தமிழ் இலக்கியம் தோன்றி இன்றைக்கு எங்கு வந்து நிற்கிறது என்பதை அதில் எழுதி உள்ளேன். ஏற்கெனவே எழுத் தாளர் வட்டத்தில் இந்த புத்தகம் உலா வந்துக்கொண்டி ருக்கிறது. சினிமா மேடையில் இப்போது தான் முதல்முறையாக வெளியா கிறது. 900க்கும் அதிக மான பக்கங்களை உள்ளடக்கியது இப்புத்தகம்.
இவ்வாறு கஸ்தூரிராஜா பேசினார்.
இடக்குனர் ரவி ராகுல் பேசியதாவது:
ரவாளி என்று பட டைட்டில் வைத்தி ருப்பது பற்றி பலரும் கேட்டார்கள். அது ஒரு ஊரின் பெயர். கதையில் முக்கியமாக இடம்பெறுவதால் அந்த பெயர் வைக்கப்பட்டது. இதில் சித்தார்த் புதுமுக ஹீரோ வாக அறிமுகமாகிறார். அவரை நான் நடிக்க அழைத்தபோது தயங்கினார். நடிப்புபற்றி ஒன்றும் தெரியாது என்றார். ஆனால் என் படத்திற்கு அவர் பொருத்தமான ஹீரோவாக இருப்பார் என்பதால் அவரை அழைத்துவந்து நடிப்பு, நடனம் , தமிழ் எல்லவற்றையும் கற்றுதந்தேன். அவர் ஈடுபாடோடு நடித்துள்ளார். ஹீரோயின் நைரசா மும்பையில் நாடகத்தில் நடித்து பயிற்சி பெற்றவர். அவரும் அருமையான நடிப்பு வெளிபடுத்தி உள்ளார். ஜெயபிரகாஷ், அப்பு குட்டி, கஞ்சாகருப்ப, ஆத்மா, என எல்லோரும் நல்ல நடிப்பு வெளிப் படுத்தி உள்ளனர். இப்படம் காதல் கதை என்றாலும் வித்தியாசமான களத்தில் கூறியுள்ளேன். அதை படம் பார்க்கும்போது அனைவரும் உணர்வார்கள்

நான் இயக்குனராவதற்கு முன்பு அதுபற்றி எல்லா அனுபவமும் பெற்ற பிறகுதான் இயக்குனராகி யிருக்கிறேன்.
இவ்வாறு ரவி ராகுல் பேசினார்
நிகழ்ச்சியில் நடிகர் கள் ஜெயபிர காஷ், அப்புகுட்டி, கஞ்சா கருப்பு, சித்தாத் நடிகை, நைரசா, விஜய முரளி வாழ்த்தி பேசினார்கள். பி ஆர் ஒ கோவிந்தராஜ் வரவேற் றார்.
