படம் : டார்க் ஹெவன்
நடிப்பு: சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால்
தயாரிப்பு:கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி
இசை: சக்தி பாலாஜி
ஒளிப்பதிவு: மணிகண்டன்
இயக்கம்: பாலாஜி
பி ஆர் ஓ : சக்தி சரவணன்
கதை : பல வருடங்களாக பூட்டிக் கிடக்கும் ஒரு பெட்டியை கடை ஊழியர் ஒருவர் திறக்கிறார். அதில் ஒரு மர்ம புத்தகம் இருக்கிறது. அதிலிருந்து எழும் சத்தம் ஊழியரை அங்கிருந்து விரட்டுகிறது. அந்த மர்ம புத்தகத்தில் இருப்பதை படிக்கும் போது அடுத்தடுத்து என்ன எதிர்காலத்தில் நிகழப் போகிறது என்ற விவரம் சிலருக்கு தெரிய வருகிறது. இது இப்படி இருக்க திடீரென்று மர்மமான முறையில் முக்கிய நபர்கள் கொல்லப்படுகிறார்கள். சைக்கோ கொலைகாரன்தான் இந்த கொலைகளை செய்கிறான் என்று போலீஸ் தேடுகிறது. இறுதியில் நடப்பது என்ன என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.
டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சித்து டார்க் ஹெவன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே போலீஸ் கதாபாத்திரம் ஏற்றிருப்பதால் அதை அவரால் எப்படி செய்ய முடியுமோ என்ற ஒரு சந்தேகம் இருந்த நிலையில் கனக்கச்சிதமாக செய்து முடித்து பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
தான் ஒரு கோபக்கார போலீஸ்காரர் என்பதை சித்து தனது முறைப்பான பார்வையில் வெளிப்படுத்துகிறார் கேரளாவிலிருந்து தப்பி வந்த முகமூடி அணிந்த சைக்கோ கொலைகாரன் தான் ஊரில் பலரைக் கொல்வதாக பரவும் செய்தியையடுத்து அவனை வலை போட்டு தேடும் சித்துவுக்கு வெவ்வேறு வகையில் சிக்கல்கள் வருவதும் ஒரு கட்டத்தில் அவரது போலீஸ் வேலைக்கு ஆபத்து வருவதுமாக காட்சிகள் ஜிவ்வென பறக்கின்றன.
எல்லா படத்திலும் சோகமாகவே நடித்துக் கொண்டிருந்த ரித்விகாவுக்கு இந்த படத்தில் சற்று மாறுபட்ட வேடம் கிடைத்திருக்கிறது. வில்லங்கமான கதாபாத்திரமென்றாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நச்சென செய்திருக்கிறார்.
படத்தில் ஒரு சைக்கோ உலவுவதாக கூறப்படுவதும் உண்மையிலேயே அந்த சைக்கோ யார் என்ற விவரம் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் தெரிய வரும்போது பெரிய ஆச்சரியம் ஆக்கிரமிக்கிறது.
தர்ஷிகா , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு கோணத்தில் கதையில் தொடர்பாவதால் இப்படித்தான் இந்த கதை முடியப்போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை அந்த வகையில் பட இயக்குனர் பாலாஜி ரசனை மிக்க சஸ்பென்ஸ் திரில்லரை தந்திருக்கிறார் என்பது மட்டும் உறுதி.
சக்தி பாலாஜி இசை வீணில்லை. மணிகண்டன் கேமரா காட்டுப் பகுதிக்குள் கண்களை பரபரப்புடன் அலைபாய வைக்கிறது.
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனங்கள் படத்தை தயாரித்திருக்கின்றன.
தி டார்க் எவன்- சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்றவர்கள் மனதையும் கொள்ளும்.

Review by
K. Jayachandhiran
www.trendingcinemasnow.com
