Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பாரிஸ் கபே ( பட விமர்சனம் )

படம்: பாரிஸ் கபே

நடிப்பு: குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா, விஜய் விஷ்வா, சாய் விக்கி, நைனா சாய்

தயாரிப்பு: தண்டர் மீடியா  மற்றும் எல் வி என்டர்டெயின்மென்ட்

இசை: கே கிருஷ்ணகுமார்

ஒளிப்பதிவு: சதீஷ் ஜி

இயக்கம்: சராஜ் சீலன்

பி ஆர் ஓ : ரியாஸ் கே ஹகமத், பாரஸ் ரியாஸ்

கதை: குரு சோமசுந்தரம் டாக்டராக இருக்கிறார். அவரது மனைவி அனுமோல் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். வெளிநாட்டில்  வேலைக்கு சென்ற மகள் தனது பாய் பிரண்டுடன்  பெற்றோரை  சந்திக்க வருகிறார். ஆனால் குரு சோமசுந்தரம்,  அனுமோல் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள், அதற்குப் பின்னணியில் நடந்தது என்ன? போன்ற முக்கிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

குரு சோமசுந்தரம் ஒரு கதாபாத்திரத்தை ஏற்கும்போது அதில் ரசிகர்களின் கவனமும் தீவிரமாக இருக்கும் அதற்கு காரணம் அவர் ஏற்கனவே ஜோக்கர் போன்ற சில மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருப்பது தான். இந்த படத்தில் டாக்டர் வேடம் ஏற்றிருந்தாலும் அதற்கு பின்னணியில் குடும்பப் பிரச்சினையில் அவர் எப்படி சிக்கிக் கொள்கிறார் என்ற சூழல்கள் ஒரு மாறுபட்ட பார்வையை  தருகிறது.

ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்று குரு சோமசுந்தரம் மீது பழி சுமத்தும் அனுமோல் ஒரு பெரியாரிஸ்டாக வருகிறார். தனது கொள்கைக்கு எதிராக, கணவரே செயல்பட்டாலும் அவரை  எதிர்க்கும் துணிச்சலுடன் பயணிக்கும் அனுமோல்  பாத்திரம்  கதையின் திருப்பத்துக்கு முக்கிய சாவியாக இருக்கிறது..

இவர்களை தவிர அர்ச்சனா, விஜய் விஷ்வா, சாய் விக்கி, நைனா சாய் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.

வழக்கமாக ஆணவ கொலைகள் கருவை கொண்ட படங்கள் ரத்தமும் சதையும் வழிய கதையை நகர்த்திச் செல்வார்கள் ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை இது மேல்மட்ட ஆணவக் கொலையாக சித்தரிக்கப்படுவதால் கதை நகர்த்தலில் கூட  A கிளாஸ் ஆடியன்ஸசை கவரும் அப்படியான அணுகுமுறையை இயக்குனர் சாரச் சீலன்   கையாண்டிருப்பது வித்தியாசம்.

கே கிருஷ்ணகுமார்  இசையும், சதீஷ் ஜி  ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

பாரிஸ் கபே – ஊற்றி மூடப்பட்ட  ஆணவ கொலையை ரீ ஓபன் செய்தால் நடக்கும் விளைவு.

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

Related posts

பாபா பட புது காட்சிகளுக்கு டப்பிங் பேசிய ரஜினி

Jai Chandran

Very Happy Birthday Director Prashanth_neel

Jai Chandran

விரைவில் விஷால் ‘சக்ரா’   டீஸர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend