Trending Cinemas Now
சினிமா செய்திகள் பொது செய்திகள் விமர்சனம்

என்ன விலை (பட விமர்சனம் )

படம்: என்ன விலை

நடிப்பு: கருணாஸ்,  நிமிஷா சஜயன், பிரதீப், கான்ஸ்டபிள் சுந்தரம், தர்ஷன,  நிரோஷா, கவி, பாண்டி, சாஷா,

தயாரிப்பு:ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: ஆல்பி ஆண்டனி

இயக்கம்: சஜீவ் பழூர்,

பிஆர்ஓ சுரேஷ் சந்திரா ( D’ One ), நாசர்

கதை: ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலுக்குள் மூழ்கி அங்கிருக்கும் சில்லறை காசுகளை சேகரிக்கும் வேலை செய்கிறார் தவசி (கருணாஸ்). அப்போது அவருக்கு ஒரு அரிய பொருள் கிடைக்கிறது. தங்கப்பதக்கமான அதில் வைர வைடூரிய கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒரு போலீஸ் வாங்கி தவசியை ஏமாற்றி பின்னர் ஒரு கட்டத்தில் அவரையே குற்றவாளியாக்கி சிறையில் தள்ளுகிறார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பப்படும் தவசிக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாட வருகிறார் பெண் வழக்கறிஞர் (நிமிஷா சஜயன்). ஆனால் இந்த வழக்கு வெவ்வேறு கோணத்தில் சென்று தவசியை பெரும் குற்றவாளியாக சட்டத்தின் முன்னிறுத்த முயற்சிக்கப்படுகிறது அதிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா என்பதை கோர்ட் வாத பிரதிவாதங்களுடன் படம் விளக்குகிறது.

வழக்கமாக கடற்கரை பகுதி படம் என்றால் அது மீனவர்களை பற்றிய படமாக தான் பெரும்பாலும் இருக்கும் இந்த படத்தை பொருத்தவரை ராமேஸ்வரம் பகுதியில் மறைந்தவர்களின் நினைவாக திதி செலுத்த வருபவர்கள் தங்களால் இயன்ற பணத்தை கடலில் விட்டெறிந்து செல்வார்கள். அப்படி வீசப்பட்ட காசுகளை சேகரிக்கும் பலர் அப்பகுதியில் இருக்கிறார்கள் அதில் ஒருவராக கருணாஸ் நடித்திருக்கிறார்

கடலுக்குள் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தை போலீஸிடம் கருணாஸ் தருவதும் அதை வாங்கும் போலீஸ் அதை எப்படி அபேஸ் செய்யலாம் என்று திட்டம் போடும்போது இந்த கதை வேறு கோணத்தில் பயணிப்பதை உணர முடிகிறது.
திடீர் குற்றவாளியாக்கப்படும் கருணாஸ் சிறையில் அடைக்கப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் சில அப்பாவிகளுக்கு நடக்கும் கொடூரம் என்பதை காட்சி விளக்குகிறது. சிறிய கேசாக போட்டு வெளியில் அனுப்பி விடுவார்கள் என்று பார்த்தால் வழக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போடப்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படுவது திரைக்க தையை வேகப்படுத்துகிறது.
கருணாசுக்கு ஆதரவாககுற்றங்களை கோர்ட்டில் வாதாடும் நிமிஷா சஜயன் தனது மாதங்களை தெளிவாகவும் துடிப்புடனும் எடுத்து வைப்பது கவனத்தை ஈர்க்கிறது அதே போல் அரசு தரப்பில் வாதாடும் வக்கீல்கள் எப்படி குற்றத்தை நிரூபிப்பது என்ற கோணத்தில்  அடுக்கிக் கொண்டே செல்வது இது எங்க போய் முடியுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ஏழையின் மானத்துக்கு என்ன விலை என்று நிமிஷா சஜயன் கேட்கும்போது அரங்கமே அமைதியாகிறது
கருணாஸ் செய்யாத குற்றத்திற்காக அனுபவிக்கும் சிறந்த தண்டனை மனவலி, அடி உதை குடும்ப சிக்கல் என பல்வேறு சூழ்நிலைக்கான கைதியாக மாறி மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார்.

பசங்க படத்தில் குட்டி பையனாக நடித்த பாண்டி இப்போது ஹீரோ அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். கருணாஸின் தங்கையை திருமணம் செய்யும் காதலனாக பாண்டி எடுத்து இருக்கிறார் பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் மற்ற எல்லா கதாபாத்திரங்களுமே மிக முக்கியமான பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது

ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

பிரம்மாண்ட படங்களுக்கு பின்னணி இசையில் அதில் உதிரி செய்யும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கும் அதே முனைப்புடன் இசையமைத்திருக்கிறார். காட்சிகளை மீறி இசை துருத்திக்கொண்டு இல்லாமல் சூழலுக்கு ஏற்ற இசையமைத்து காட்சிகளை மனதில் பதிய வைத்திருக்கிறார்.

ஆல்பி ஆண்டனி கேமரா காட்சிகளை நிஜம் போல் கண்முன் நிறுத்துகிறது

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் இயக்குனர் சஜீவ் பழூர் மலையாள படம் போல் தமிழ் படம் இயக்குவது இல்லையே என்று இயக்குனர்கள் மீது இருக்கும் குறையை போக்கும் வகையில் நல்லதொரு மலையாள படத்தை நேரடி தமிழ் படமாக இயக்கி தந்திருப்பது பாராட்டத்தக்கது. இது போன்ற கதைகள் வெற்றி பெற்றால் இன்னும் கூட நிறைய கதைகளை தமிழில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

Related posts

UDHAYAA’s Directorial FAMILY Now Screening in Behindwoods

Jai Chandran

‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலை தரும் விநியோகஸ்தர்கள்

Jai Chandran

2 வருடம் பிரேக் எடுத்து படம் இயக்கிய ஜோஜு ஜார்ஜ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend