Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராம் பொதினேனியின் “டபுள் ஐஸ்மார்ட் டீசர் மே 15 வெளியீடு

*உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது!*

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் டபுள் இம்பேக்ட் ரெடி! டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் அட்டகாசமான கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்ன்மெண்ட் டீசர் மே 15 ஆம் தேதி ராமின் பிறந்தநாளன்று வெளியாகிறது.

டீசர் அறிவிப்பு போஸ்டரில் ராம் ஒரு பவர் பேக் அவதாரத்தில் இருக்கிறார். டைகர் ஸ்ட்ரிப் சட்டை மற்றும் டோர்ன் ஜீன்ஸ் அணிந்துள்ள ராம் ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் பட்டாசுகளையும் பிடித்திருக்கிறார். இதில் இருந்து மாஸ் ஆக்‌ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால், அடுத்தடுத்த அப்டேட்களுடன் வரவுள்ளனர்.

டபுள் ஆக்‌ஷன், டபுள் மாஸ் மற்றும் டபுள் எண்டர்டெயின்மெண்ட் என இதன் இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மீறியதாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு ராம் ஸ்டைலிஷாகவும், நடிகர் சஞ்சய் தத் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ உட்பட பல படங்களில் பூரி ஜெகன்நாத்திற்கு சிறந்த இசையை வழங்கிய மெல்லிசை பிரம்மா மணி ஷர்மா ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் கையாள்கின்றனர்.

ராம் மற்றும் பூரியின் காம்பினேஷனில் உருவாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படும்.

*நடிகர்கள்:* ராம் பொதினேனி, சஞ்சய் தத்

*தொழில்நுட்பக் குழு*:
எழுத்தாளர், இயக்குநர்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
சிஇஓ: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்

Related posts

Bachelor will be streaming on SonyLIV real soon

Jai Chandran

தேவர் திருகோவிலில் தேசிய தலைவர் படக் குழு பூஜை

Jai Chandran

‘ஜவான்’ பற்றி ஷாருக் – விஜய் சேதுபதி கலகலப்பான பதில்கள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend