தமிழகத்தில் 1, 30, 261 பேருக்கு கொரோனா பாதிப்பு..
சென்னை, ஜூலை
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது இதனால் தமிழகத் தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிகசென்னையில் இன்று 2,869 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 64 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குண மடைந்தவர்களின் எண் ணிக்கை 82,324 ஆக உயர்ந் துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,105 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் இன்று 37,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 15,29,092 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டி ருக்கிறது.
இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.