சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியளுக்கு வருவேன் என்று கடந்த 2 ஆண்டுக்கு முன் அறிவித்தார். அதற்காக தந்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2021ம் ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அவர் தந்து அரசியல் நிலைப்பாடு பற்றி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயாலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
ராகவேந்திரா மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுடன் நடந்தது. அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். ரஜினியும் முககவசம் அணிந்திருந்தார். கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அதில் அரசியல் பற்றி மனதில் உள்ளதை வெ:ளிப்படுத்திய ரஜினி, அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் முடிவு செய்கிறேன் என்றதுடன் சில நிர்வாகிகளின் செயல்பாடு பற்றி கண்டிப்பு தெரிவித்தார்.
மேலும் மாவட்ட செயல்லளர்கள் ஒவ்வொவுவருடனும் அவர் தனித்தனியாக விவாதித்தார். அவரிடம் செயலாளர்கள், ’இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை தமிழக மக்களுக்கு ஒரு தலைவர் தேவை நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்’ என்றனர். அதை ரஜினி கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் வீடு திரும்பினார். அவரிடம் அரசியல் நிலைப்படு குறித்து கேட்டனர்.
அதற்கு பதில்; அளித்த ரஜினிகாந்த்த், ;நான் வந்து என்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சிக்கிரம் சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.