நடிகர் சூர்யா இன்று டிவிட்டர் பக்கத்தில்.’ ’பேசிய வார்த்தைகளைவிட பேசாத மவுனம் மிக ஆபத்தானது, காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க நம் மவுனம் கலைப் போம்’ என மெச்செஜ் பதிவிட்டிருந்தார்.
இஐஏ (EIA) என்ற ஹேஷ்டேக் பதிவிட்டிருக்கிறார். சூழலியல் குறித்து மத்திய அரசு வெளியிட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக சூர்யா இப்படி யொரு பதிவிட்டிருக்கிறார். இதனை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்தனர். ஜஸ்ட் ஒரு டிவிட் தெறிக்கவிட்ட சூர்யா என அவர்கள் கருத்து வெளியிட்டிருந் தனர்.
சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று படம் தியேட்டரில் வெளியாக விருக்கிறது. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜிவி.பிரகாஷ்குமார் இசை அமைத் திருக்கிறார். கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் இப்படம் வெளியாகவிருக்கிறது.