படம்: குதிரைவால்
நடிப்பு: கலையரசன், அஞ்சலி பட்டேல்
தயாரிப்பு: ப.ரஞ்சித், விக்னேஷ் சுந்தரேசன்
இசை: பிரதீப்குமார்
ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துகுமார்
இயக்கம்: மனோஜ் லியோனல் ஜான்சன், ஷியாம் சுந்தர்
பி.ஆர்.ஒ: குணா
வங்கியில் வேலை பார்க்கும் கலையரசனுக்கு காலையில் எழுந்து பார்க்கும்போது முதுகில் குதிரைவால் முளைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அவர் கண்ணுக்கு மட்டுமே அந்த வால் தெரிகிறது. அவரது தினசரி வாழ்க்கை வித்தியாசமாக கழிகிறது. மனம் ஒருநிலை கொள்ளாமல் அலுவலத்திலேயே பித்து பிடித்தவர்போல் நடந்து கொள்கிறார். வேலை பறிபோ கிறது. தனது இந்த நிலைக்கு காரணம் புரியாமல் தவிக்கும் அவர் கடைசியாக ஜோதிடரை சந்திக்கிறார். யாரோ ஒரு பெண் அவர் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்க லாம் என்று அவர் கூறுகிறார். சிறுவயதில் தன்னுடன் நட்பாக பழகிய பக்கத்து வீட்டு சிறுமி நீலி பற்றிய ஞாபகம் வருகிறது. இருவரும் கிணற்றில் குதித்து இறக்கை முளைத்து வானத்தில் பறக்கலாம் என்று முடிவு செய் கின்றனர். சிறுமி இறக்கிறாள் ஆனால் கலையரசன் உயிரோடு உலவிக் கொண்டி ருக்கிறார். அந்த உள்ளுணர்வு அவரை வாட்டி வதைக்கிறது. இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.
அப்பாடா ஒரு வழியாக கதை இதுதான் என்பதை யூகிக்க முடிந்ததே பெரிய கண்டுபிடிப்பு என்றுதான் தோள் தட்டிக் கொள்ளத்தோன்றுகிறது. ஏனென்றால் இது வழக்கமான மசாலாவோ, ஆக்ஷன் கதையோ அல்ல..
கலையரசன் தான் ஏற்றிருக் கும் வேடத்தை உள்வாங்கி நடிப் பதும் முள்ளின் மீது விழுந்த சேலை போன்ற நிலைமை தான். இப்படி கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று சில சமயம் கடுப்பேறினாலும் அவர் வேடத்துக்குள் மூழ்கி விட்டதைத்தான் அவர் செய்யும் சேட்டைகள் வெளிப்படுத்து கின்றன.
சேத்தன் கதாபாத்திரம் அவ்வப்போது வந்து செல் கிறது. திடீரென்று அவர் இறந்துவிட்டாரென்றும் அவரை கலையரசன்தான் கொலை செய்தார் என்றும் ஒரு முடிச்சை டிடெக்டிவ் மூலம் அவிழ்க் கிறார் இயக்குனர்.
சிட்டிக்குள் நடக்கும் கதை ஒரு கட்டத்தில் கிராமத்துக்கு பின்னோக்கி செல்கிறது.
எம் ஜி ஆர் காலகட்டமாக அக்காட்சிகள் சித்தரிக்கப்படு கின்றன. கிளைமாக்ஸே எம் ஜி ஆர் தொப்பி, கறுப்பு கண்ணாடியை வைத்துத்தான் முடிக்கிறார்கள்.
இந்த கதைக்கு அடித்தளம் “ரெபரன்ஸ் மேனியா” என்ற மருத்துவ பெயரை ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கி றார்கள். இந்த படம் பற்றிய கருத்து என்பது படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக மாறுபட்டதாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.
ப.ரஞ்சித், விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கின் றனர்.
படத்தின் கருத்து மற்றும் காட்சி விளக்கம் பற்றி கேட்டால் இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜான்சன், ஷியாம் சுந்தர் இருவருமே வேவ்வேறு விளக்கம் தருவார்கள்.
பிரதிப்குமார் இசையில் கோர்வை என்பதைவிட அந்தந்த காட்சிக்கான இசை என்றுதான் பிரித்துக்கொள்ள வேண்டும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமார் நிலைமையும் அதுதான்.
குதிரைவால்- புதிரான கதை.