படம் : பேய் இருக்க பயம் ஏன்
நடிப்பு : கார்த்தீஸ்வரன், காயத்ரி ரமா, அர்ஜுன் நியதி, முத்துக்காளை, நெல்லை சிவா
தயாரிப்பு :எஸ் டி தமிழரசன்
இசை :ஜோஸ் பிராங்க்ளின்
ஒளிப்பதிவு :அபிமன்யூ
இயக்கம் :கார்த்தீஸ்வரன்
படத்தின் இயக்குனரும் ஹீரோவும்
கார்த்தீஸ்வரன் தான். பேய் என்றால் இதுவரை திகிலாகத்தான் காட்டப்பட்டி ருக்கிறது. இதில் பேயையும் நப்புடன் பழக்க வைக்கலாம் என்ற ஒரு புது கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.
சினிமா டைரக்டராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார் ஹீரோ. அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார் அவரது அம்மா. வேண்டாவெறுப்பாக காயத்ரி ரமாவை திருமணம் செய்து கொள்கிறார். இருவரையும் வேறு வீட்டில் தேனிலவுக்கு அனுப்பி வைக்கும் தாய் கூடவே அந்த வீட்டில் பேய் இருப்பதாகவும் சொல்லி அனுப்புகி றார். அந்த வீட்டுக்கு சென்ற பிறகு இருவருக்கும் என்ன நடக்கிறது என்பதற்கு வித்தியாசமான பதில் சொல்கிறது படம்.
படத்தின் முதல் பாதி வரை காமெடி செய்கிறோம் என்று அரட்டையடித்திருக் கிறார்கள் நெல்லை சிவா, முத்துக் காளை. போலி சாமியார் கோதை சந்தானம் சிரிக்க வைக்க படாத பாடுபடுகிறார்கள்.
புது ஜோடிகள் கார்தீஸ்வரன், மனைவியாக வரும் காயத்ரியம் தொட்டா சிணுங்கிபோல் மோதிக் கொண்டு பேய்களையே பயமுறுத்துகி றார்கள்.
பேய் வேடமேற்றிருக்கும் அர்ஜுன், நியதி பொருத் தமான ஜோடிகளாக வருகின்றனர்.
மனைவி சேலை வாங்க மறுத்தவுடன் அதை பேய் நியதியிடம் கொடுப்பதும் அதை வாங்கி கட்டும் நியதி கார்த்தீ ஸ்வரனை திரும்ப சொல்வதும் பேய் காமெடி.
புதுமையான சிந்தனையை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் கார்த்தீஸ்வரன் கதையின் போக்கில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்க லாம். எல்லோருடைய கணிப்புப்படி படத்தின் நீளத்தையும், குறைத்திருந் தால் இன்னமும் சுவாஸ்யம் கூடி இருக்கும்.
அபிமன்யுவின் ஒளிப்பதிவு ஓகே. ஜோஸ் பிராங்கிளின் இசை காட்சி யோடு ஒன்றவைக்கிறார். பாடல் கள் கேட்கும்படி உள்ளது.
பேய் இருக்க பயமேன் -புது முயற்சி.