Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல், விஜய் வாக்களித்தனர்..

கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று செவ்வனே தனது பணிகளை நிறைவேற்றி வந்திருக்கிறார். மகளிர் உரிமைத்தொகை, பள்ளிகளில் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தி இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக தலை நிமிர செய்திருப்பது அவரது சாதனையாக அனைத்து தரப்பிலும்   பாராட்டப்படுகிறது. ஐந்தாண்டு பதவி காலம் முடிவதையொட்டி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் மு க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர், தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை,, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு தங்கள் கட்சிக்கும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கும் வாக்குகள் சேகரித்தனர்.
மேலும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தமிழகத்துக்கு நேரில் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்கள். அனைத்து தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நாளான இன்று தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
அதற்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள், மூத்த குடிமக்கள் பெண்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் காலையிலேயே ஆர்வமாக வந்து வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

நடிகர் அஜீத், சென்னையின் திருவான்மியூர் தொகுதியில் 7 மணிக்கு முன்னதாகவே தனது வாக்கைச் செலுத்திவிட்டுச் சென்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.
மேலும் சரத்குமார், விக்ரம், ராதிகா, தனுஷ், சிவகுமார், சூர்யா, கார்த்தி, கௌதம் கார்த்திக், ஜெய், ஆர் ஜி பாலாஜி, நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் இயக்குனர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இரட்டை இலைக்கு ஓட்டுபோட்டும் என்னை அருகில் அமர்த்தியவர் கலைஞர்: ரஜினி பரபரப்பு பேச்சு

Jai Chandran

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய “அனந்தா” பட டிரெய்லர் வெளியீட்டு விழா..

Jai Chandran

லாக் டவுண் டைரி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend