பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் ரொமாண்டிக் கலந்த ஆக்ஷன் படம் ராதே ஷியாம். இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ராதா கிருஷ்னா குமார் இயக்குகிறார்.
யு வி கிரியேஷன் சார்பில் புஷன் குமார் வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத் தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா செய்திருக்கிறார். இந்த ஆண்டு வெளியாக உள்ள இப்படம் முடிவடை யும் தருவாயில் உள்ளது. பிரபாஸின் அட்டகாசமான புகைப் படத்துடன் இப்படக் குழு புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்ததற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது.பான்
இந்தியா படமாக 5 மொழிகளில் ராதே ஷ்யாம் உருவாகி இருக்கிறது.