Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவு சாதனை..

கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுகழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பாராட்டு பெரும்பாலையில் தனது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெயரிட்டு நடத்தினார்.

திமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி பதவி முடிந்த நிலையில் தமிழகத்தில் புதிய சட்டமன்ற பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற பேரவை தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி அதாவது நேற்று தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது.

மதச்சார்பற்ற கூட்டணி என்று திமுக தலைமையில் ஒரு அணியும் தேசிய ஜனநாயக கூட்டணி என்று அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டன. தவிர நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி, சசிகலா நடராஜன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் பெயரில் தொடங்கிய கட்சி ஆகியவையும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

மொத்தம் 4,023 பேர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 14.59 லட்​சம் முதல் தலை​முறை வாக்​காளர்​கள் உட்பட மொத்​தம் 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர்.
மேலும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தமிழகம் முழு​வதும் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டன.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கியது.
பாது​காப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர், 83,875 காவல் துறை​யினர், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். 1.06 லட்​சம் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. காலை முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்களிக்க தொடங்கினர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்​தில் இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்​களித்​த​தால், வாக்​குப்​ப​திவு 85 சதவீதம் பதிவானது. இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை 85 சதவீதம் வாக்கு பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெற உள்​ளது.

Related posts

மீரா மிதுன் இடத்தில் டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார்!

CCCinema

Lyca Production Gives a Chance to Direct a Film

Jai Chandran

Rajinikanth Statement Regarding Dhadha Sahep

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend