Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட்டு: அரசு அனுமதி.. மாஸ்டர், ஈஸ்வரன் பொங்கல் விருந்து

சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக கொரோனாஅ ஊரடங்கால்  மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்விலும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால்  சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மூக்குத்தி அம்மன் போன்ற பல படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால் பெரிய படங்களான மாஸ்டர் போன்றவை ரிலீஸ ஆகவில்லை.  தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

 

நடிகர் விஜய் தமிழக முதல் வரை நேரில் சந்தித்து 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கோரிக்கை வைத்தார். அதே போல் நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு போன்றவர்களும் கோரிக்கை வைத்தனர்.  இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கி அறிவித்துள்ளது. இது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

சிம்புவின்  ஈஸ்வரன் படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை சுசீந்திரன் இயக்கி உள்ளார். நிதி அகர் வால் ஹீரோயினாக நடித் திருக்கிறார்.

Related posts

நயன் தாரா & விக்னேஷ் சிவன் குஜராத் மொழியில் படம் தயாரிக்கிறார்கள்

Jai Chandran

செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து

Jai Chandran

OyaadhaAlaiPoley from #Mughizh is here

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend