Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒ 2 (பட விமர்சனம்)

படம்: ஓ 2 (O2)

நடிப்பு: நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாபர் இடுக்கி, ஆடுகளம் முருகதாஸ், சிவ ஷாரா

தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.ஸ்ரீதர்

இசை: விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு: தமிழ் ஏ அழகன்

இயக்கம்: ஜி.எஸ்.விக்னேஷ்

ரிலீஸ்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

பி.ஆர்.ஒ: சதீஷ் (AIM)

இயற்கை ஆர்வலரான நயன்தாரா தனது மகனுக்கு ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசிக்க சிரமம் என்பதால் அவனுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரில் சுவாசம் அளித்து வருகிறார். கேரளாவில் மகனுக்கு அறுவை  சிகிச்சை  ஏற்பாடு செய்து ஆம்னி பஸ்ஸில் மகனுடன் புறப்படுகிறார்.  அதே பஸ்ஸில்  ஒரு அடாவடி போலீஸ்,  ஒரு காதல் ஜோடி,  சிறை தண்டனை முடிந்துதிரும்பும் பெரியவர் என பலர்  பயணிக்கின்றனர். வழியில் ஏற்படும்  டிராபிக் ஜாமால் பலர் வேறு பஸ்ஸில் மாற்றிய. அனுப்பப்படு  கின்றனர். நயன்தாரா அவரது மகன் உள்ளிட்ட சிலருடன் பஸ் வேறுபாதை வழியாக. புறப்படுகிறது.  அப்போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக. பஸ் மண்ணில் புதைகிறது. பஸ்ஸுக்குள் சிக்கியவர்கள்  உயிருக்கு போராடுகின்றனர்.  சில மணிநேரம் மட்டுமே உயிருடன் இருகக  முடியும் என்ற நிலையில் ஆக்ஸுஜனுக்காக அல்லாடு கின்றனர். ஒரு கட்டத்தில் மூச்சு திணறி சாகும் சூழல் ஏற்பட அடாவடி போலீஸ்,  நயன்தாரா குழந்தைக்காக வைத்திருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை துப்பாக்கிகாட்டி மிரட்டி பறிக்கிறார். மற்றவர்களையும் ஆக்ஸிஜன் வேண்டுமென்றால் நயன்தாரா குழந்தையை கொல்லுங்கள் என்று ஏவி விடுகிறார். அதை எதிர்த்து நயன்தாரா போராடுகிறார்.  இந்நிலை யில் மீட்பு குழு மண்ணில்  புதைந்தவர் களை மீட்க போராடுகிறது. இதன்முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

மென்மையாக பட.ம் தொடங்குகிறது ஆன்லைனில் மாணவர்கள் மர செடி வகைகள் பற்றி கேட்கும் கேள்விக்கு நயன்தாரா பதில் அளித்துக் கொண்டி ருக்க. மறுஅறையில் சிலிண்டரில் ஆக்ஸிஜன் குறைந்து மகன் மூச்சுவிட சிரம்மப்படுவதை அலாரம் மூலம் தெரிந்துக்கொள்ளும் நயன்தாரா ஓடிச் சென்று மகனுக்கு மாற்று சிலிண்டர் பொருத்தும்போதே சிறுபதற்றம் தொடங்கி விடுகிறது. அடுத்த பதற்றம் பஸ் மண்சரிவில் சிக்கி புதையும்போது தொடங்கி கிளைமக்ஸ் வரை நீடிக்கிறது.

காற்றில் இலவசமாக கிடைக்கும் ஆக்ஸிஜனின் அருமை மண்ணில் புதைந்தவர்கள் ஆக்ஸிஜன் கிடைக் காமல் திணறும்போதும்  அதற்காக கொலை செய்யவும் துணியும்போது புரிகிறது.

வயிற்றில் அடிபட்டு மூச்சுவிட சிரமப்பட்டு பெருமூச்சு விடும் பெரியவரால் தனக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது என்று கூறி அவரை அடாவடி போலீஸ் சுட்டுக் கொள்வது அதிர்ச்சி. அடுத்து நயன்தாரா தனது மகனுக்காக வைத்திருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பிடுங்குவதற் காக. அடாவடி போலீஸ் துப்பாக்கியும் கையுமாக மிரட்ட அவரை நயன்தாரா துணிச்சலாக தாக்கி வீழ்த்த.போராடு  வதும்  பதற்றத்தை மேலும் அதிகரிக் கிறது. பஸ்ஸுக்குள் நடக்கும் இந்த வாழ்வா , சாவா ? போராட்டம்  ரசிகர்களை இறுக்கையில் ஆணி அடித்தார்போல் அசையாமல் சிலையாக உட்கார வைக்கிறது.

மகனின் உயிரை காப்பாற்ற நயன்தாரா போராடுவதும், அடாவடி போலீஸை அஞ்சாமல் தாக்குவதுமாக நடிப்பில் சுடர்விடுகிறார்.  அதேபோல் அவரது மகனாக வரும் சிறுவன் ரித்விக் நடிப்பில் சென்ட்டம். வாங்குகிறார்.

பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாபர் இடுக்கி, ஆடுகளம் முருகதாஸ், சிவ ஷாரா நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்து ரசிகர்களுக்கு நல்ல படங்களை தரும் ட்ரீம் வாரியர்ஸ் எஸ். ஆர்.பிரகாஷ்பாபு. எஸ்.ஆர்.ஸ்ரீதர்,  ஒ2 படம் மூல.ம் மீண்டும் அந்த நம்பிக்கை யை   நிரூபித்திருக்கின்றனர்.

இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் ஆக்ஸிஜன் என்ற ஒற்றை வார்த்தையை  வைத்துக்கொண்டு ஒரு முழுநீள த்ரில்லர் படத்தை தந்து திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்tதிருக்கிறார்.

கிராபிக்ஸ் வல்வி எஃப் எக்ஸ் காட்சி களும்  அதற்கேற்ற அதிரவைக்கும் விஷால் சந்திரசேகர் இசையும்  காட்சிகளை தாங்கிப்பிடித்திருக்கிறது.

ஒ 2 -.ஒரு பஸ்ஸுக்குள் நடக்கும் மரணப் போராட்டம்

 

 

 

 

 

 

 

Related posts

Actor Prasanna, Sneha got Vaccination

Jai Chandran

‘கிராண்மா ‘ ஹாலிவுட் தரத்தில் ஒரு ஹாரர் படம்!

Jai Chandran

50 படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend