Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜாவின் தபலா கலைஞர் காலமானார்

7 வயசில ரெக்கார்டிங் ஆரம்பித்து ஏறக்குறைய 68 ஆண்டுகள் தபலா வாசித்தவர். வடக்கே ஆர்.டி..பர்மன், சி.ராமசந்திரா, லஷ்மி காந்த் பியாரிலால், நவ்ஷாத், பப்பிலஹரி, தெற்கே திரை இசை திலகம் கே.வி.எம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி,, இசைஞானி என வலம் வந்து இன்றைய தலைமுறை ரஹ்மான் ,யுவன், கார்த்திக் ராஜா, ஜி.விபிரகாஷ் என சுமார் 2500 படங்கள், *5க்கும் அதிகமான மொழிகள், ஏறக்குறைய 60,000 பாடல்கள்…*
இவருடைய பெருமையை உதாரணமா சொல்லனும்னா…

ரஜினி நடித்து மெல்லிசை மன்னர் இசையில் வந்த தில்லு முல்லு, பில்லா படங்களுக்கு தபலா வாசித்துவிட்டு, அதே ரீமேக்காக வெளியான யுவன் இசையில் வந்த தில்லுமுல்லு, பில்லாவுக்கும் தபலா வாசித்தவர். “வெத்தலைய போட்டேண்டி, ராகங்கள் 16 உருவான” பாடல்கள் ஆகச்சிறந்த உதாரணங்கள்…
ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல… “துக்கிரி தனமா பேசிக்கினு இருந்தா துன்னுற சோத்துக்கு தாளம் தாண்டா போடனும்” என்ற மனோரமாவின் டயலாக்கை தொடர்ந்து இவரின் தபலா அதகளம் ஆரம்பிக்கும். மனோரமாவின் கேள்விக்கு கமல் பதில் சொல்லும் போது பின்னணியில் தபலாவில் பதில் சொல்லுவது போல இருக்கும்… இந்த பாடலின் இரண்டாவது இடை இசையில் காரிலிருந்து நடன மங்கையர் இறங்கி ஒரு சேர கமலுடன் நடனம் ஆடும் போது வரும் இசை… அப்பப்பா… இந்த தபலா இசை பலரது ரிங் டோனாக இருந்தது, இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது…

“கிராமிய பாடல்கள்ள அந்த வளைவு நெளிவு மற்றும் இசை நுணுக்கங்கள் எல்லாம் அவருக்கு தான் தெரியும். மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு தபலாவுக்கு முக்கியதுவம் கொடுத்திருப்பார். அதே போல இளைய நிலா மொழிகிறதே பாடலுக்கு கிடாருக்கு முக்கியதுவம் கொடுத்திருப்பார்..” ஒரு நிகழ்வில் இசைஞானி பற்றி தபலா பிரசாத்…
இன்னும் இசைஞானியின் இசையில் ஒரு நாளும் உனை மறவாத, சிங்களத்து சின்ன குயிலே, வா வெண்ணிலா, பூவே செம்பூவே உன் வாசம் என பாடல்களை அடுக்கி கொண்டே போகலாம்.

மாபெரும் தபலா கலைஞர் தபலா பிரசாத் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்…
என்றும் உங்களுடன்…

Related posts

கொம்பு சீவி (பட விமர்சனம்)

Jai Chandran

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !

Jai Chandran

PeiMama from September 24th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend