படம்: முடக்கறுத்தான்
நடிப்பு: டாக்டர் வீரபாபு, மஹானா, சூப்பர் சுப்பராயன், சமுத்திரக்கனி, சாம்ஸ், மயில்சாமி , அம்பானி சங்கர், காதல் சுகுமார்
தயாரிப்பு: வயல் மூவிஸ்
இசை: சிற்பி
ஒளிப்பதிவு :அருள்செல்வன்
இயக்கம்: டாக்டர் வீரபாபு
பி ஆர் ஓ: ரியாஸ் கே. அகமத்
மூலிகை வியாபாரம் செய்து வரும் டாக்டர் வீரபாபுவுக்கும் மஹானா விற்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்காக புத்தாடை, பொருட்கள் வாங்க சென்னை செல்கிறார் வீரபாபு. அங்கு தனது உறவினர் குழந்தை காணாமல் போனதை அறிந்து அதை கண் டுபிடிக்க கோதாவில் இறங்கு கிறார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தையை ஒரு கடத்தல் கூட்டம் கடத்திச் சென்று பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட வைத்ததை கண்டுபிடிக்கிறார். அதிர்ச்சி அடையும் வீரபாபு கடத்தல் கூட்டத்தின் பின்னணி, அதை இயக்குவது யார் என கண்டு பிடித்து குழந்தையை எப்படி மீட்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
டாக்டர் வீரபாபு பற்றி ஒரு உண்மையை இப்போது சொல்லியாக வேண்டும். கொரோனா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை தனது சித்த மருத்துவத்தால் காப்பாற்றியவர் வீரபாபு. அவர்களின் நிஜ ஹீரோ வாக இருக்கும் வீரபாபு தற்போது ரீல் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
ஹீரோ ஆசை வந்தாலும் மூலிகை விற்கும் நபராக பொருத்தமான வேடத்தில் வருகிறார்.
துடிப்பும் இளமையும் இருப்பதால் அதற்கேற்ப பரபரப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஆக்ஷன் கதாபாத்திரத்தில் களம் இறங்கி இருக்கிறார். அவருக்கு வேகம் இருக்கிறது ஆனால் இதுதான் முதல் படம் என்பதை மறந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது .
சூப்பர் ஸ்டார் செய்யும் வேலை களை எல்லாம் முதல் படத்திலேயே முயற்சிப்பது தேவையற்றது.
அந்த நடிப்பை இன்னும் வேறு விதத்தில் காட்டி இருக்கலாம்.
முதலில் திரையில் தனக்கொரு இடம் பின்னர் தன்னுடைய இமேஜை வளர்த்துக் கொண்டு அதன் பிறகு இதுபோன்ற ஆகஷன் காட்சிகளை செய்திருந் தால் வரவேற்பு கிடைத்திருக்கும்.
அவரது ரஃப்பான முகத்துக்கும், துடிப்புக்கும் ஆக்சன் வேடம் பொருத்தம்தான். .
இன்னும் கொஞ்சம் பயிற்சி, இன்னும் கொஞ்சம் முயற்சி, இன்னும் கொஞ்சம் அனுபவம் இருந்து அவர் இந்த களத்தில் இறங்கி இருந்தால் வெற்றி கைக்கு எட்டியிருக்கும்.
மூலிகை மருத்துவர் வீரபாபு தன் பங்குக்கு படத்தில் சில மூலிகை குறிப்புகளை கொடுத்திருக்கலாம், பிரண்டை துவையல் செய்வது, குடியை மறக்க ஒரு டிப்ஸ் என்று ஒரு சில டிப்ஸ் தர முயன்றாலும் அதை காமெடிக்கு பயன்படுத்தி விடுகிறார்.
சிறப்பு கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்திருக்கிறார். அவரை இன்னும் சில காட்சி களுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.
வில்லனாக ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் நடித்துள்ளார்.
மறைந்த மயில் சாமி ஏற்கனவே பல படங்களில் குடிகாரனாக நடித்தது போல் அதேவேலை இப்படத்திலும் செய்து சிரிப்புக்கு பயன்பட்டிருக்கிறார். காதல் சுகுமார், அம்பானி சங்கர், சாம்ஸ் கலகலப்புக்கு சுவை கூட்டுகின் றனர்.
பல்வேறு மறக்க முடியாத பாடல் களை தந்திருக்கும் சிற்பி இப்படத்தில் நீண்ட இடை வெளிக்கு பிறகு இசை. அமைத் திருக்கிறார். பாடல்களைவிட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியது காட்சிக்கு காட்சி தெரிகிறது.
அருள்செல்வன் ஒளிப்பதிவு படத்துக்கு கை கொடுக்கிறது.
ஹீரோவாக நடித்திருக்கும் வீரபாபுவே படத்தின் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனாலும் அதை சமாளித்து படத்தை திரைக்கு கொண்டு வந்திருப்பதே ஒரு வெற்றிதான்.
மமுடக்கறுத்தான் – விழிப்புணர்வு.
