படம்: வீட்ல விசேஷம்
நடிப்பு: ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா முரளி, கே பி சி ஏ. லலிதா, யோகிபாபு, மயில்சாமி, ஜார்ஜ் மரியான், ஷிவானி நாராயணன், புகழ், பவித்ரா லோகேஷ், விஷ்வேஷ், கமலா காமேஷ்
தயாரிப்பு: ஜீ ஸ்டுடியோஸ்,
பேவியூ புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்
இசை: கணேஷ் கோபிகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துகுமார்
இயக்கம்: ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன்
பி.ஆர்.ஓ: சுரேஷ் சந்திரா
ரயில்வேயில் பணியாற்றுகிறார் சத்யராஜ். இவரது மனைவி ஊர்வசி. இவர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட இரண்டு மகன்கள். ஆர்.ஜே.பாலாஜி பள்ளி ஒன்றில் பணியாற்றுகிறார். கல்யாண வயதில் இருக்கும் பாலாஜி தன் பள்ளி நிர்வாகி மகள் அபர்ணாவை காதலிக்கிறார். 50 வயதை கடந்தாலும் சத்யராஜ் அப்பாவித்தனமாக இருக்கி றார். கல்யாண வயதில் மகன் இருக்கி றான் என்பதை கூட எண்ணிப்பார்க் காமல் ஊர்வசியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள அவர் கர்ப்பமாகிறார். தாய் கர்ப்பமாக இருப்பதையறிந்து அதிர்ச்சி அடையும் பாலாஜி அவமான மாக உணர்கிறார். அவரை நண்பர்களும் மற்றவர்களும் கேலி செய்கின்றனர். காதலி அபர்ணாவின் தாயும் அவரை அவமானப்படுத்துகிறார். முதலில் தாயை நினைத்து கோபம் அடைந்தாலும் பின்னர் அவரது முடிவை ஏற்றுக் கொண்டு குழந்தை பெறுவதற்கு ஆதரவும் அன்பும் காட்டுகிறார். இந்நிலையில் அபர்ணாவு டனான காதல் என்னவானது? தாய் ஊர்வசி என்ன குழந்தை பெறுகிறார் ? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
குடும்ப உறவுகள் பற்றி பேசும் படங்கள் தமிழில் அரிதாகி விட்டது. வீட்ல விசேஷம் முழுக்க குடும்ப உறவுகள் பற்றி பேசும் படமாக வந்திருப்பது ஆறுதல். 80களில் வெளியான கே.பாக்யராஜ் ஸ்டைல் பாணி கதையாக உருவாகியிருக் கும் இப்படம் சிரிப்புக்கு சிரிப்பு, காதலுக்கு காதல், அறிவுரைக்கு அறிவுரை என சீனுக்கு சீன் பின்னிபெடலெடுக்கிறார் ஹீரோ ஆர்.ஜே.பாலாஜி
அல்வா கொடுத்து கர்ப்பமாக்கும் அந்தக்கால சத்யராஜ் இதில் அப்பாவித்தனத்தைக் காட்டி கர்ப்பமாக்குகிறார். ஊர்வசியை கர்ப்பமாக்கிவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் இயல்பாக வேலைக்கு செல்வது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதைபொருட்படுத்தாமல் தான் 50 வயதிலும் ஆம்பள சிங்கம் என்பதை நிருபித்த உணர்வுடன் மீசையை முறுக்கி விட்டுக் கொள்வது என தன் பாணியில் காமெடியை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.
பிரசவ அறையில் ஊர்வசி வலியால் துடிக்கும்போது ” உன்னால் முடியும் புஷ் புஷ்” என நர்சுகளுடன் சேர்ந்து சத்யராஜ் சத்தம்போட அதைக்கண்டு எரிச்சல் அடையும் ஊர்வசி அவரை கன்னத்தில் அறைந்து, வாடா வந்து இந்த வலியை அனுபவிச்சிப்பார்” என்று கத்தும்போது அரங்கே சிரிப்பலையில் அல்லோகலப் படுகிறது.
அதேபோல் பால்கனியில் லைட் எரிவைத பார்த்து ” லைட் ஆஃப் பண்ணலயா” என்று சத்யராஜ் சொல்ல அதைக்கேட்டு குடும்பமே அவரை முறைப்பதும் அலறவிடும் காமெடி.
எல்லா காட்சிகளுக்கும் அச்சாணியாக செயல்பட்டிருக்கிறார் ஊர்வசி. சும்மாவே காமெடி செய்வார் ஊர்வசி , இதில் முழுக்கவே காமெடி பாத்திரம், சும்மா விடுவாரா? பட்டய கிளப்பி இருக்கிறார்.
தான் கர்ப்பமாக இருப்பதை கல்யாண் வீட்டில் சீமா உள்ளிட்டவர்கள் கேலி பேசு வதை கண்டு கண்கலங்கும் போது உருக வைக்கிறார்.
50 வயதுக்கு பிறகு அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அவமானமாக எண்ணும் ஆர்.ஜே.பாலாஜி நண்பர்களை கூட சந்த்திக்காமல் ஓடி ஒளிவது, தாய் ஊர்வசி, தந்தை சத்யராஜிடம் முறைப்பு காட்டி குமுறுவது எதார்த்தம். அதேசமயம் தன் அம்மாவை அபர்ணாவின் தாய் இழிவுபடுத்தி பேசுவதைக் கேட்டு அவருக்கு சவுக்கடி பதில் தந்து தன் அம்மா, அப்பா பெருமையை எடுத்துச் சொல்லும்போது அரங்கை அமைதிக் கடலாக்குகிறார்.
“சூரரைப்போற்று” படத்தில் கிராமத்து பெண்ணாக ஆம்பள தோரணையில் விரைப்பாக நடித்த அபர்ணா முரளி இதில் பாலாஜியின் காதலியாக மார்டன் பெண்ணாக வந்து இயல்பான நடிப்பால் மனதில் இடம்பிடிக்கிறார்.
பாலாஜியின் பக்கத்துவீட்டுக்காராக வரும் மயில்சாமி, கெஸ்ட் ரோலில் தலையை காட்டும் யோகிபாபு தங்கள் பங்குக்கு சிரிப்பு பட்டாசு கொளுத்தி வீசுகின்றனர்.
,ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்திருக்கின் றனர்.
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் குடும்ப பிரச்னையை அசல் மாறாமல் உறவுகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இயல்பான படமாக இயக்கி சினிமா பார்ப்பதுபோல் இல்லாமல் ஒரு குடும்ப நிகழ்வை அருகிலிருந்து பார்ப்பதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
கணேஷ் கோபி கிருஷ்ணன் இசையில் பாடல்களில் இனிமை தவழ்கிறது.
கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு கலர்புல்லாக காட்சிகளை விருந்துபடைத் திருக்கிறது.
செல்வா ஆர்.கே எடிட்டிங் காட்சிகளை விறுவிறுப்பு குறையாமல் கோர்த்திருக் கிறது. “அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சா” என்று கேட்டுக்கும் அளவுக்கு ஸ்கிரிப்பான எடிட்டிங் படத்துக்கு பலம்.
“பதாய் ஹோ” என்று இந்தியில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படமே “வீட்ல விசேஷம் ” பெயரில் தமிழில் ரீ மேக் ஆகியிருக்கிறது.
வீட்ல விசேஷம் – சிரிப்பும், சென்ட்டிமென்ட்டும்.
–