படம்: முன்னா
நடிப்பு: சங்கை குமரேசன், நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,கென்னடி, சண்முகம், வெங்கட்.
தயாரிப்பு : ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் ராமு முத்துச் செல்வன்
பாடல் இசை : டி.ஏ.வசந்த்.
பின்னணி இசை: சுனில் லாசர்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
ஒளிப்பதிவு: ரவி
இயக்கம் – சங்கை குமரேசன்.
சட்டையால் தனக்கு தானே அடித்துக்கொண்டு யாசகம் செய்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தை சேர்ந்த முன்னாவுக்கு கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக பரம்பரை தொழிலை செய்ய மறுத்து காது சுத்தம் செய்யும் வேலை செய்து அதில் வரும் சொர்ப்ப பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்துகிறார். அவருக்கு அதே ஊரை சேர்ந்த தண்ணிபாம்பு என்கிற ஆசாமி நண்பராகராகிறார். முன்னாவை திருட்டுத் தனமாக லாட்டரி சீட்டு வாங்க வைக்கிறார் நண்பர். இதில் 2 கோடி ரூபாய் பரிசு விழுகிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வரும் முன்னாவை அவரது தந்தை ஏற்க மறுக்கி றார். வீட்டை விட்டு வெளி யேறும் அவர் நண்பரின் உதவியுடன் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். அந்தப் பெண்ணோ குடும்பம் நடத்துவதுபோல் நாடகமாடி சொத்தை அபகரித்து செல்கிறாள் மீண்டும் தெருக் கோடிக்கே வருகிறார் முன்னா. இறுதியாக அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதே கதை.

சினிமாத்தனமில்லாமல் அமைக்கப்பட்ட கதை என்ப தால் நடிகர், நடிகைகளும் சினிமாத்தனமில்லாத எதார்த்த தோற்றத்திலேயே வருகின் றனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி கதையின் நாயகன் முன்னாவாக நடித்திருக்கிறார் சங்கை குமரேசன்.
சாட்டையால் உடலில் தனக்கு தானே அடித்துக்கொண்டு பின்னர் யாசகம் செய்து அதில் வரும் வருமானத்தில் பிழைக்கும் கூட்டத்தை பற்றிய கதையாக அமைக்கப் பட்டிருக்கிறது.
தினமும் சாலையில் சந்திக்கும் சக மனிதர் தோற்றத்தில் இருக்கும் சங்கை குமரேசன் தனது கதாப்பாத்திரத்துக்கு சிக்ஸ்பேக் ஹீரோ முக்கிய மல்ல கொஞ்சமாக தொந்தி இருந்தாலும் தானே அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்த மான தேர்வு என்று முடிவு செய்து எந்தவொரு இடத்தி லும் தயக்கம் காட்டாமல் நடித்திருக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு ஒரு அப்ளாஸ் தரலாம்.
கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை சங்கை குமரேசன் எப்படி நிறை வேற்றப்போகிறார் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது திருட்டுத்தனமாக வங்கிய வெளிமாநில லாட்டரி சீட்டில் 2 கோடி பரிசு விழுந்ததாக காட்டுவது செயற்கைத்தன மாக இருந்தாலும் எப்படி எதிர்பாராமல் அந்த பணம் வந்ததோ அப்படியே காணா மலும் போய்விடும் என்ற எதார்த்தையும் அடுத்த சில காட்சிகளிலேயே உணர்த்தி விடுகிறார்.
தண்ணிபாம்பு கதாபாத் திரத்தில் வரும் கென்னடி வழுக்கை தலையாக இருந்தா லும் வாயாடியாக வலம் வருகி றார். சங்கை குமரேசனுக்கு அவ்வப்போது நம்பிக்கை யூட்டி கதையை நகர்த்த பயன்பட்டிருக்கிறார்.
ஹீரோவின் தந்தையாக வரும் ராஜு சாட்டையடி கூட்டத்தை சேர்ந்தவராகவே மாறி இருக்கி றார். தங்கையாக வரும் நியா கிருஷ்ணா, மனைவியாக வரும் ரம்யா வேடத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.
ராமு முத்துச் செல்வன் தயாரித்திருக்கிறார். பாடல் களுக்கு இசை அமைத்திருக் கிறார் டி.ஏ.வசந்த். யாரு ஈஸ்வரன் பாடல் கேட்கலாம்.
சங்கை குமரேசனை சுற்றியே கதை செல்வதால் முழுநேர மும் அவர் காட்சியில் இடம் பெறுகிறார். மாற்று சாதியினர் தங்களது இனத்தவரை எப்படி கிள்ளுகீரையாக எண்ணுகி றார்கள் என்பதை பட்டவர்த் தனமாக காட்டி இருக்கிறார். சொல்லவந்த விஷயத்தை இன்னும் அழுத்தமாகக்கூட கூறியிருக்கலாம்.
முன்னா – சாதி பாகுபாட்டின் தோலுரிப்பு.

