Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹிட் லிஸ்ட் (பட விமர்சனம்)

படம்: ஹிட் லிஸ்ட்

நடிப்பு: சரத்குமார், புதுமுக ஹீரோ விஜய் கனிஷ்கா, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன்,  ஸ்மிருதி வெங்கட்,  ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நட்சத்தரா, அனுபமா குமார், ராமச்சந்திர ராஜு  முனிஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன்,

தயாரிப்பு: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

இசை: சி சத்யா

ஒளிப்பதிவு: கே ராம்சரண்

இயக்கம்: சூரியகதிர் காக்களார்,   கே கார்த்திகேயன்

பி ஆர் ஓ: ரியாஸ் கே அகமத்

 

வள்ளலாரின் அன்பைப் பரப்பும் விஜய் கனிஷ்காவின் தாயும் தங்கையும் திடீரென்று கடத்தப்படுகிறார்கள். அதிர்ச்சி அடைந்த விஜய் அது பற்றி போலீஸ் அதிகாரி சரத்குமாரிடம் புகார் செய்கிறார். அடுத்த சில நிமிடங்களில் முகமூடி அணிந்த கடத்தல்காரனிடமிருந்து விஜய்க்கு மிரட்டல் வருகிறது. கடத்தல்காரன் என்ன மிரட்டல் தருகிறான் என்பதை சரத்குமார் ஸ்பை கேமரா மூலம் அறிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் விஜயை இரண்டு கொலை செய்யும்படி கடத்தல்காரன் கெடு விதிக்கிறான் சொன்னதை செய்யாவிட்டால் தாயையும் தங்கையையும் கொலை செய்து விடுவேன் என்று எச்சரிக்கிறான். விஜயை கடத்தல்காரன் மிரட்டுவது ஏன்? அதற்குப் பின்னணியில் இருக்கும் சம்பவங்கள் என்ன என்பதற்கு பரபரப்புடன் பதில் அளிக்கிறது ஹிட் லிஸ்ட்.

பல்வேறு வெற்றி படங்களை இயக்கி அஅளித்த விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இப்ப படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இயக்குனர் மகன் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக நடித்து முதல் படத்திலேயே மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார் விஜய் கனிஷ்கா.

கே ஜி எஃப் வில்லன் ராமச்சந்திர ராஜு பிரதான வில்லனாக நடித்திருக்கிறார். அவரை கொல்ல வேண்டும் என்பதுதான் விஜய் கனிஷ்காவுக்கு  முகமூடி மனிதன் விதிக்கும் நிபந்தனை. ஆஜான பாகு தோற்றம் கொண்ட ராமச்சந்திர ராஜுவை இள வயது விஜய் கனிஷ்கா எப்படி சண்டையிட்டு அவரை தோற்கடிக்க போகிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாயும் புலி ஆக மாறி விஜய் கனிஷ்கா ராமச்சந்திர ராஜு உடன் மோதும் காட்சிகள் நிமிர வைக்கிறது.. விழுந்தும் உருண்டும் புரண்டும் அவர் மோதும்போது உண்மையிலேயே பல்வேறு காயங்கள் ஏற்பட்டதாக விஜய் கனிஷ்க தெரிவித்தது அவரது அடுத்த கட்ட நகர்வுக்கான படிக்கல்லாக அமையலாம்.

விஜய் கனிஷ்காவுக்கு பின்னணியில் இருந்து உதவும் போலீஸ் உயர் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். வெறுமனே வசனம் பேசிவிட்டு இப்படி அப்படியும் நடந்து ஸ்டைல் காட்டிவிட்டு சென்று விடுவாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று தனது ஆக்சன் ரூபத்தை சரத்குமார் வெளிப்படுத்தும் போது அப்ளாஸ் பறக்கிறது.

முனிஷ்காந்த் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக சொன்னதை செய்துவிட்டு செல்கிறார். பால சரவணன் ரெடன் கிங்ஸ்லி படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று தான் பெயர் ஆனால் அவர்கள் ஞாபகத்துக்கு வர மறுக்கிறார்கள்.

ஆச்சரியமான என்ட்ரி தந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். படத்தில் அவருக்கும் ஒரு சண்டைக்காட்சி உள்ளது அவரது கதாபாத்திரம் சஸ்பென்ஸாக மெயின்டெய்ன் செய்வது பிளஸ்.

கே எஸ் ரவிக்குமார் தனது குரு இயக்குனர் விக்ரமன் மகனுக்கு ஒரு பெரிய வாய்ப்பு தரும் வகையில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தி இப்படத்தை அதிக பொருள் செலவில் தயாரித்திருப்பது அவரது குரு விசுவாசத்தை காட்டுகிறது.

கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சூரியகதிர் காக்களார்,   கே கார்த்திகேயன்  இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். கதையை கிளைமாக்ஸ் வரை எப்படி சஸ்பென்ஸாக கொண்டு செல்வது என்பதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். அவர்களது மெனக்கெடல் வீண்போகவில்லை.

இசையமைப்பாளர் சி சத்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இசை அமைத்திருந்தாலும் ஆக்சன் படத்திற்கான அதிரடி காட்டத் தவறவில்லை

ஒளிப்பதிவாளர். கே ராம்சரண் காட்சிகளை தெளிவாக படமாக்கி கண்களை திரையை விட்டு விலகாமல் நிலைக்கச் செய்கிறார்.

ஜான் ஆபிரகாம்  மின்னல் வேக எடிட்டிங் விறுவிறு.

ஹிட் லிஸ்ட் – சஸ்பென்ஸ் செண்டிமெண்ட் திரில்லர்.

 

 

 

 

Related posts

மேலும் 1லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன..

Jai Chandran

Jawan becomes the first film to collect 300 Cr. in 6 days

Jai Chandran

யாஷ் வெளியிட்ட “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend