பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்புசி செலுத்திக்கொண்டார். இந்நிலையில் அவர் வீட்டில் இன்று குடும்பத்தினர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்,. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு எக்மோ சிகிச்சை, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விவேக் உடல் நிலை24 மணி நேரம் கழித்துத்தான் பற்றி கூறமுடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது.’விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு ஏற்படவில்லை’ என்றார்.