Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

போகி (பட விமர்சனம்)

படம்: போகி

நடிப்பு: நபி நந்தி, சரத், லப்பர் பந்து சுவாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம் எஸ் பாஸ்கர்

தயாரிப்பு: பிஜி பிச்சி மணி

இசை: மரியா மனோகர்

ஒளிப்பதிவு: ராஜா சி சேகர்

இயக்கம்: விஜய் சேகரன் எஸ்.

பிஆர் ஓ: சதீஷ் (AIM)

போக்குவரத்து, மருத்துவ வசதி கூட இல்லாத மலைகிராமத்தில் இருக்கும் நபி நந்தியின் தங்கை படிக்க சென்னை  வர,  அவரது ஒரு செயலால்  கொலை செய்யப்படுகிறார். இதையறிந்த நபி தங்கை சாவுக்கு காரணமானவர்களை எப்படி பழி தீர்க்கிறார்  எதனால் தங்கை கொல்லப்படுகிறார் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது

படத்தின் முதல் பாதி  தலை தெறிக்க ஓட்டுவதுபோல் என்ன?  ஏது?  என்று புரிந்து கொள்ள முடியாதளவுக்கு  நபியும், சரத்தும்  யாரையோ கொல்ல துரத்துகின்றனர் இதெல்லாம் ஏன் நடக்கிறது  என்பதற்காக 2ம் பாதிவரை  காத்திருக்க வேண்டி உள்ளது.

இடைவேளைக்கு பிறகு பசுமையான மலைகிராமத்துக்கு கதை நகரும்போது தென்றல் காற்று முகத்தில் உரசி செல்வதுபோல் ஒரு இதம் பிறக்கிறது.

நபி நந்தி, சரத் இருவருக்கும் ஒரு உறவுமுறை மலர்கிறது. அது என்ன என்பது இங்கு சஸ்பென்ஸ்.

லப்பர் பந்து படத்தில் தினேஷின் ஜோடியாக நடித்த சுவாசிகா இதில் இளமை துள்ளளு டன் நடித்துள்ளார்.

பூனம் கவுர் ஒரு பாடல் காட்சிக்கு வந்து கவர்ச்சியாக ஆடிவிட்டு செல்கிறார்.

பிஜி பிச்சிமணி தயாரித்துள்ளார்.

மரியா மனோகர் இசை,  ராஜா சி சேகர் கேமரா இடைவேளைக்கு பிறகு கேட்கவும் பார்க்கவும் வைக்கிறது.

இயக்குனர் விஜய் சேகரன் எஸ்.  சமூக விழிப்புணர்வை ஆணி அடித்தார்போல் சொல்ல முயன்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் பசுமை காட்சிகளை முதல் பாதியிலும் வைத்திருந்தால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும்.

போகி – சமுதாய அக்கறை.

 

By

ஜெயச்சந்திரன் கே

www trendingcinemasnow.com

 

Related posts

Samuthirakani -Yogi babu starring “Yavarum Vallavare”

Jai Chandran

கெவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’..!

Jai Chandran

சந்திரபாபு – குமாரசாமிக்கு மகள் திருமண அழைப்பு தந்த சரத் – ராதிகா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend