படம்: மதில்
நடிப்பு: கே.எஸ்.ரவிகுமார், மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமுர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன்,
தயாரிப்பு: சிங்கா சங்கரன்
இசை: எல்.வி.முத்துகுமாரசாமி
ஒளிப்பதிவு: ஜி.பாலமுருகன்
இயக்கம்: மித்ரன் ஜவஹர்
ரிலீஸ்: ஜி 5
பள்ளியில் படிக்கும்போதே சக மாணவருடன் சண்டை வரும் போது அந்த மாணவர் மன்னிப்பு கேட்டால் மன்னிக் கும் மனம் படத்தவர் லட்சுமி காந்தன். அவரது தந்தை மரணம் அடைந்த நிலையில் வீட்டை காலி செய்யச் சொல் கிறார் வீட்டு ஓனர். இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று எண்ணத்துடன் தனது 30 வருட உழைப்பில் சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்கிறார். அவரது வீட்டு சுவற்றில் அந்த ஏரியா அரசியல்வாதி தனது விளம்பரத்தை எழுதுகிறார். அதைக்கண்டு கோபம் அடையும் லட்சுமிகாந்தன் அதை அழிக்கிறார். அதிர்ச்சி அடையும் அரசியல்வாதி அந்த வீட்டு சுவற்றை இடித்து தள்ளுகிறார். போலீஸில் புகார் கொடுத்தபோதும் பெரிதாக பலன் இல்லை. பிறகு லட்சுமி காந்தன் தனது சாதுர்யத்தை பயன்படுத்தி அரசியல் வாதியை எப்படி அடிபணிய வைத்து மன்னிப்பு கேட்க வைக்கிறார் என்பது கிளை மாக்ஸ்.
லட்சுமிகாந்தன் என்ற கதையின் நாயகனாக கே.எஸ்.ரவிகுமார் அற்புத மான நடிப்பை வெளியிட்டி ருக்கிறார். சுமார் 50 வயது தோற்றத்திலிருக்கும் அவர் அரசியல்வாதியுடன் எப்படி மோதுகிறார் என்பது தான் கதையின் புத்திசாலித்தனம்.
போலீஸ் நிலையத்தில் தன் மீது புகார் கொடுத்த ரவிகுமாரை தனது வீட்டுக்கு அழைத்து கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தும் மைம் கோபி கோபத்தை தூண்டி விடுகிறார்.
கன்னத்தில் அறைந்த கோபிக்கு பயப்படாமல் அவரை எதிர்த்து போராட ரவிகுமார் எடுக்கும் முடிவு காட்சிகளுக்கு சக்கரம் கட்டு கிறது.
யூ டியூபில் தோன்றி தனக்கு மைம் கோபி செய்த அநியாயத் தை அம்பலப்படுத்தும் ரவிகுமார் கடைசிவரை கெத்து குறையா மல் நிற்பது வேடத் துக்கு வலு சேர்க்கிறது.
அரசியல்வாதியாக வரும் மைம் கோபி வில்லனாக பயமுறுத்துகிறார். ரவிகுமாரை அவர் சாதாரணமாக முதலில் எடை போடுவதும் பின்னர் அவர் காட்டும் ஆட்டத்தில் மைம் கோபி ஆடிப்போய் பதறுவதும் திருப்பு முனை காட்சிகள்.
நாடக குழு தலைவராக வரும் காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் காமெடி வெடி கொளுத்தி போடுகின்றனர். சரோஜாதேவி போல மேக்கப் போட்டுக் கொண்டு கே.எஸ்.ரவிகுமாரை மீது ஒருதலையாக காதல் கொண்டு அவரை நினைத்து உருகும் மதுமிதா தன் பங்குக்கு சிரிப்பூட்டுகிறார்.
மதில் சுவரை வைத்து இப்படி யொரு அரசியல் தெறிக்கும் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் மனதில் இடம் பிடிக்கிறார். காட்சிகளை சுவரஸ்யமாகவும் நம்பும் படியும் அமைத்திருப்பது இயக்குனரின் வெற்றி.
ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவும் கைகொடுக்கிறது.
மதில் – அரசியல்வாதியை வெல்லும் சாதாரண மனிதன்.
previous post
next post