நடிகர் விவேக் சமீபத்தில் மார்டைப்பில் காலமானார். முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து மன்சூர் அலிகான் ஆவேசமாக பேட்டி அளித்தார். தடுப்பு பற்றி அவதூறு பரப்பியதாக அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அதில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை யெனவும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால், புதிய மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.