கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார் கமீலா நாசர். ஒருமுறை அக்கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து திடீரென விலகினார். இதுபற்றி கமீலா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன்.
நன்றிகள்..
இவ்வாறு கமீலா நாசர் கூறி உள்ளார்.