Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரிஷாவின் “தி ரோட்” படம் ஆஹா ஓ டி டியில் அமோக வரவேற்பு

த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தி ரோடு திரைப்படம் பரவலான பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. திரிஷா மிகச்சிறந்த நடிப்பையும் கடின உழைப்பையும் வழங்கி இருப்பதாக விமர்சகர் களிடையே பெயர் கிடைத்தது. இந்நிலையில் ‘தி ரோடு’ திரைப்படம் சமீபத்தில் ‘ஆஹா’ OTT தளத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் தவறவிட்ட பலரும் ‘Aha’ OTT தளத்தில் பார்த்து பாராட்டி சமூக வலைதளங்களில் நேர்மறை யான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.
‘ஆஹா’ தளத்தில் வெளியான ஒரே நாளில் 25 மில்லியன் காட்சி நிமிடங்கள் எனும் சாதனையை படைத்திருக்கிறது. மேலும் புதிய பார்வையாளர்கள் பலரும் இத்திரைப் படத்தை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரிஷாவும் ‘டான்சிங் ரோஸ்’ சபீரும் மோதிக் கொள்ளும் வித்தியாசமான இறுதி சண்டைக் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி வெளியானதால் இத்திரைப்படம் பெரும்பாலான பார்வையாளர்களை உலகம் முழுக்க சென்றடைந்துள்ளது.
இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்காக ரசிகர்களுக்கும், ஆஹா OTT தளத்திற்கும் நன்றி தெரிவித்து உள்ளார் இயக்குனர் அருண் வசீகரன். இத்திரைப்படத்தின் வித்தியாசமான திரைக்கதையை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற தயக்கத்தோடு இருந்ததாகவும், ஆனால் பெரும்பா லான ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் அருண் வசீகரன் கூறினார்.

Related posts

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன்வைரமுத்துவின் அம்பறாத்தூணி

Jai Chandran

அதிரடி ஆக்ஷனில் சாக்ஷிஅகர்வால்!

Jai Chandran

உயிர்காக்கும் பணியில் இணைய ஒரு கனிவான வேண்டுகோள்.. அமித்பார்கவ், ஸ்ரீரஞ்சனி முன்னெடுப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend