Trending Cinemas Now
விமர்சனம்

கபடதாரி (பட விமர்சனம்)

படம்:கபடதாரி
நடிப்பு: சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ், ஜே எஸ் கே சதிஷ்குமார், சம்பத் மைத்ரேயா, சுமன் ரங்கநாதன், சாய் தீனா, அபிஷேக் சங்கர், ஜி.தஞ்செயன், ராட்சன் யாசர்
தயாரிப்பு: லலிதா தனஞ்செயன்
இசை: சைமன் கே. கிங்
ஒளிப்பதிவு;ராசாமதி
இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
1977ம் ஆண்டு தடா தொல்லி யல் ஆய்வகத்திலிருந்து கதை தொடங்குகிறது. விஜயநகர பேரரசின் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டு அதை பாது காத்து வந்தவர் கொல்லப்படுகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இடத்தில் பள்ளம் தோண்டும்போது  3 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகிறது. அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று டிராபிக் இன்ஸ்பெக்டர் சிபிக்கு சந்தேகம் வரவே அதுபற்றி  துப்பறிய முயல்கிறார். டிராபிக் போலீஸுக்கு இந்த வேலை கிடையாது. அதை க்ரைம் போலீஸார் பார்த்துக் கொள் வார்கள் என்று கமிஷனர் எச்சரிக்கிறார். ஆனால் அதை யும் மீறி துப்பறிய முயலும் சிபிக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கிறது. அதை வைத்து கொலையாளியை கண்டுபிடித் தாரா என்ற சஸ்பென்ஸுக்கு கிளைமாக்ஸ் விடை சொல் கிறது.


சிபிக்கு இதுவொரு வித்தி யாசமான படம்தான். டிராபிக் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவர் கிரைம் துறைக்கு தன்னை மாற்றுங்கள் என்று கமிஷனரிடம் கேட்க, எழுத்துத் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டு கிரைம் துறைக்கு மாற்றச் சொன்னால் அது முடியாது என்று மறுத்ததும் அதனால் சோர்ந்து போகாமல் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளில் ஒரு குழந்தை உள்பட 3 நபர்களை கொன்றது யார் என்ற ஆதாரங்களை விடாப்பிடியாக தேடி அலைதும், பழைய பத்திரிகை களை தேடிப் பிடித்து அதில் ஆதாரம் தேடுவதுமாக ஜேம்ஸ் பாண்ட் வேலைகளை நன்றாகவே செய்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி நாசரை தேடி சென்று அவரிடம் விவரங்கள் வாங்க படாதபாடுபடுவது கலகலப்பு. பிறகு நாசரும் சிபிக்கு உதவ முன்வந்தபிறகு காட்சிகளில் வேகம் கூடுகிறது.
நாசர், சிபி சந்திப்புகளிலும் படத்தின் இடைவேளைக்கு பிறகும் காட்சிகளில்சோர்வு காணப்படுகிறது. நீண்ட நேரம் ஒரே காட்சியை பார்ப்பது போன்ற எண்ணம் ஏற்படு கிறது. அதில் கொஞ்சம் கத்தரி வைத்திருந்தால் காட்சியில் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சுமா ரங்கநாத் தமிழ் பக்கம் தலை காட்டி இருக்கிறார். அத்துடன் கவர்ச்சியும் காட்டி கிரங்க வைக்கிறார். மாஜி போலீஸ் நாசர், பத்திரிகை நிருபர் ஜெயபிரகாஷ், ஜே. எஸ்.கே. சதிஷ்குமார், டிவி எடிட்டர் ஜி.தனஜ்செயன், தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கின்றனர். நந்திதா சுவேதாவுக்கு அதிக வேலை இல்லை.
வில்லனாக நடித்திருக்கும் சம்பத் மைத்ரேயா தமிழுக்கு புதுமுகமாக இருந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
திரைக்கதை தழுவல் மற்றும் வசனத்தை ஜான் மகேந்திரன், ஜி,தஞ்செயன் எழுதி உள்ள னர். ராசாமதி கேமரா தேவை யான லைட்டிங்கு டனும். லைட்டிங் இல்லாமலும் சுழன்றிருக்கிறது. சில காட்சி களின் நீளத்தை குறைத்திருந் தால் சூடு குறையாமலிருந் திருக்கும். கன்னட படத்தை தமிழுக்கு எற்ப இயக்கி இருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
கபடதாரி- ரசிகர்களை கவரும்.

Related posts

மைக்கேல் (பட விமர்சனம்)

Jai Chandran

ஐந்தாம் வேதம் ( வெப் சீரிஸ் விமர்சனம்)

Jai Chandran

777 சார்லி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend