வீரபாண்டிய கட்டபொம்மன். படம் சிவாஜி வாழ்க்கையில் மட்டுமல்ல தமிழ் திரையுல கிற்கே மிக முக்கியமான படம் அப்படத்தில் சிவாஜி பேசிய வசனத்தை பேசிக்காட்டி பிற்காலத்தில் ஹீரோவான வர்கள் பலபேர் உள்ளனர்.
இப்படத்தில் பிரிட்டிஷ் வெள்ளைக்கார ஜாக்ஸன் துரையாக சி.ஆர்.பார்த்திபன் நடித்திருப்பார். சிவாஜியை வரவழைத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு கிஸ்தி கட்ட வில்லை, திரை கட்டவில்லை, வரி கட்டவில்லை, வட்டி கட்டவில்லை என்று கேட்பார். உடனே சிவாஜி கிஸ்தி திரை வரி வட்டி யாரைக் கேட்கிறாய் வரி என்று ஆக்ரோஷமாக பதில் அளிப் பார். இக்காட்சியில் ஜாக்ஸன் துரையாக நடித்தவர் சி.ஆர்.பார்த்திபன்.
பழம்பெரும் நடிகரான இவருக்கு சென்ற டிசம்பர் மாதம் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வீட்டில் ஒய்வில் இருந்தார். இந்நிலையில் திடீர் உடல் நல பாதிப்பு காரணமாக அவர் நேற்று காலை மரணம் அடைந்தார்.
பார்த்திபன் சொந்த ஊர் வேலூர். கடந்த 25 வருடமாக சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். 120க்கும் மேற்பட்ட பங்களில் நடித்தி ருக்கும் இவர். எம்ஜிஆருடன் இதயக்கனி, சங்கே முழங்கு என 10 படங்களில் நடித்திருப் பதுடன் சிவாஜியுடன் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆலய மணி உள்ளிட்ட 16 படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசனுடனும் பல படங் களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக சின்ன வாத்தியார் படத்தில் நடித்தார். இப்படம் கடந்த 1997ம் ஆண்டு திரைக்கு வந்தது.
மறைந்த பார்த்திபனுக்கு வனஜா என்ற மனைவி, ராம் மோகன், நாராயணன் கோபி நாதன், ரங்க ராமானுஜன் என்ற மகன்களும் ரஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சி. ஆர். பார்த்திபன் மூத்த உறுப்பினர். அவர் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரி வித்துள்ளது. சென்னை ஆதம் பாக்கத்தில் உள்ள மயானத்தில் பார்த்திபன் இறுதி சடங்குகள் நடைபெற்றன.