Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தொடரும் (பட விமர்சனம்)

படம்: தொடரும்

நடிப்பு: மோகன்லால், ஷோபனா, மணியன்பில்லா ராஜு, இர்ஷத் அலி, பிரகாஷ் பர்மா, பின்னு பப்பு

தயாரிப்பு: எம். ரஞ்சித்

இசை: ஜாக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு: ஷாஜி குமார்

இயக்கம்: தருண் மூர்த்தி

பிஆர்ஓ: நிகில் முருகன்

பழைய அம்பாசெடர் கார் வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் மோகன்லால் ஒரு சமயம் தன் மகனிடம் கோபித்துக் கொள்ள அவன் வீட்டை விட்டு செல்கிறான். இதற்கிடையில் காரை ரிப்பேருக்கு விடும் இடத்தில் அங்கிருக்கும் ஒருவன் அந்த காரில் கஞ்சா கடத்தியதாக போலீசில் பிடிபடுகிறான். போலீசார் காரை பறிமுதல் செய்து வைக்கிறார்கள். தன்னுடைய காரை திருப்பித் தரும்படி போலீசாரிடம் மோகன்லால் கெஞ்சி கேட்கிறார். இந்த விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் செல்ல அவர் காரை திருப்பித் தருவதாக வாக்கு கொடுத்து ஒரு சவாரிக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி மோகன்லாலிடம் கூறுகிறார். அதன் பிறகு பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகிறது. போலீசுக்கும் மோகன்லாலுக்கும் ஒரு கட்டத்தில் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிலான காட்சிகளுடன்   படம் கிளைமாக்ஸ் நோக்கி நகர்கிறது.

மலையாளத்திலிருந்து வரும் படங்கள் நல்ல கதையாக யிருக்கும் என்பது ரசிகர்கள் நம்பிக்கை. அந்த பிம்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் கிரைம் த்ரில்லராக வந்திருக்கிறது மோகன்லால் நடித்திருக்கும் தொடரும்.

போலீசார் தன்னுடைய காரை பறிமுதல் செய்ததை அறிந்து எப்படி எல்லாம் போலீஸிடம் பணிந்து பேச வேண்டுமோ அப்படியெல்லாம் பேசி காரை திரும்ப பெற பார்க்கும் மோகன்லால் சராசரி ஒரு கார் டிரைவரின் இயல்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய கார் திரும்ப கிடைப்பதற்காக போலீசார் இழுத்த இழுப்புக்கெல்லாம் மோகன்லால் பணிந்து செல்வது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே, இவருக்கு கோபமே வராதா என்று ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு காட்சிகள் அமைந்திருக்கிறது. ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து மோகன்லால் கோபாவேசத்துடன் போலீசாரை நய்ய புடைப்பது போடு அப்படி போடு  என்று குரலெழுப்ப வைக்கிறது. அப்போது தொடங்கும் ஆக்சன் காட்சிகள் கிளைமாக்ஸ் வரை இருக்கை நுனியில் ரசிகர்களை அமர வைத்து விடுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சோபனா நடித்திருக்கிறார் அவருக்கு ஒன்றும் பெரிதாக வேலை இல்லை. இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் வேடங்களில் வரும் நடிகர்கள் சிரித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் வில்லத்தனத்தை வெளிப்படுத்துவது இருவரின் ஷேடிஸ்ட் குணத்தை அம்பலப்படுத்துகிறது.

எம் ரஞ்சித் படத்தை தயாரித்திருக்கிறார்.

ஜாக்ஸ் பிஜாய் இசை காட்சிகளை ஓவர் டேக் செய்யாதது அருமை.

ஷாஜி குமார் கேமிரா ரசிகர்களை காட்டுக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

இயக்குனர் தருண் மூர்த்தி பக்கா திருப்பங்களுடன் திரில்லர் காட்சிகளை அமைத்திருப்பது பலம். ஆனால் காட்சிகள் நீண்டு கொண்டே செல்வது கொஞ்சம் சோர்வை ஏற்படுகிறது.

தொடரும் – மோகன்லால் வெற்றிப்பட்டியல் தொடரும்.

 

Related posts

“காந்தி கண்ணாடி” பட விமர்சனம்

Jai Chandran

பிரபாஸ் “தி ராஜா சாப்” பட க்ளிம்ப்ஸ் வெளியானது

Jai Chandran

தூத்துக்குடி உண்மைச் சம்பவமாக தெற்கத்தி வீரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend