Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வங்காள விரிகுடா (பட விமர்சனம்)

படம்: வங்காள விரிகுடா

நடிப்பு: குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா

நடிப்பு, தயாரிப்பு , கதை, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என 21 பொறுப்புகள் : குகன் சக்ரவர்த்தியார்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

காதல் தோல்வி அடைந்த சிவனாண்டி என்கிற அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்) பணம் சம்பாதிக்க முடிவு செய்து பெரிய பணக்காரர் ஆகிறார். ஊர் மக்களுக்கு நன்மை செய்கிறார். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற மாஜி காதலியை காப்பாற்றி அடைக்கலம் தருகிறார். அண்ணாச்சியின் நல்ல குணத்தை பார்த்து நண்பனின் மகள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அதை ஏற்று திருமணம் செய்கிறார். ஆனால் அண்ணாச்சிக்கு மனைவி மூலமும், மாஜி காதலி மூலமும் எதிர்பாராத சிக்கல்கள் வருகிறது. அது அவரது வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.

படத்தின் ஹீரோ குகன் சக்கரவர்த்தியார் .நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் என 21 பொறுப்புக்களை ஏற்று இப்படத்தில் பணியாற்றி ஒரு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்திருக்கிறார். 21 பொறுப்புகள் ஏற்றிருந்தாலும்  ஏனோ தானோ என்று படத்தை எடுக்காமல் ஒரு கதை, அதில் காதல், ஆக்சன், அரசியல் செண்டிமெண்ட், ஹாரர், மெசேஜ் என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இயக்கி இருப்பது ஆச்சரியத்தை தருகிறது

சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருக்கும் அளவுக்கு பெரிய புள்ளியான அண்ணாச்சி குகன் சக்கரவர்த்தியார் படம் முழுவதும் பட்டு ஜரிகை வேட்டி, கலர்ஃபுல் சட்டை என தனது கெட்டப்பை விட்டுக் கொடுக்காமல் பராமரித்திருப்பதுடன் நடிப்பை பொறுத்தவரையில் ஆக்சனிலும், சோகத்திலும், குத்தாட்டத்திலும் இறங்கி அடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு காதல் கதையாக சென்றுக் கொண்டிருந்த படம் திடீரென்று பேய் கதையாக மாறுவது பின்னர் அது அரசியல் கதையாக உருபெறுவது என காட்சிகள் விறுவிறுப்பாக செல்கின்றன.
திராவிட அரசியலை மையப்படுத்தும் வகையில் வங்காள விரிகுடா கடற்கரையில் துயில் கொண்டிருக்கும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்றவர்களின் சமாதிகளுக்கு புதிய வடிவம் கொடுத்து மெரினா கடற்கரை பெயரை மாற்றி திராவிட கடற்கரை என பெயர் சூட்ட வேண்டுமென்று அரசுக்கு இயக்குனர் கோரிக்கை விடுத்திருப்பது அரசு கவனத்தில் கொள்ளத்தக்கது.

பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

வங்காள விரிகுடா – ரசிகர்களை திருப்தி படுத்தும்.

 

Review By
K Jayachandhiran
#trending cinemas now.com

Related posts

Maasive Banner of Maayon

Jai Chandran

Dhanush starrer “Maaran” trailer to be released by fans

Jai Chandran

2K லவ்ஸ்டோரி” ஹீரோ ஜெகவீரை அறிமுகம் செய்த ராமராஜன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend