Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இன்ஷா அல்லாஹ் (பட விமர்சனம்)

படம்: இன்ஷா அல்லாஹ்

நடிப்பு: மோகன், மேனகா, நம்பிராஜன்,  திருமதி பகவதி அம்மாள், அப்துல்சலாம், நரேன் பாலாஜி

தயாரிப்பு: சாகுல் ஹமீது   (நேசம் எண்டர்டடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்)

இணை தயாரிப்பு: கோவை இப்ராஹிம்

இசை: செந்தில் குமரன் சண்முகம் (படப்பிடிப்பு  நடந்த இடத்தில் நேரடி ஒலிப்பதிவு)

ஒளிப்பதிவு: டி.எஸ்.பிரசன்னா

இயக்கம்: சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM)

இஸ்லாம் மார்க்க நெறிமுறைகளாக ஹ்ஜ்யணம் உள்ளிட்ட ஐந்து கடமைகள் வலியுறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இள்லாமியரும்  இந்த ஐந்து கடமைகளை தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கும் இஸ்லாமியர் இறப்பிற்கு பிறகு சொர்க்கத்துக்கு  செல்வர். ஐந்து கடமைகளைஅ நிறைவேற்றாதவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் என்ற இஸ்லாம் மார்க்க நெறியை இப்படம் விளக்குகிற்து.

படத்தில் கதை கருப்பொருள் ஐந்து கடமைகளை வலியுறுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் எல்லாமே இயல்பானதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.  எந்த ஒரு இடத்திலும் சினிமாத் தனமோ, நடிப்பின் முத்திரையோ பதிவு செய்யப்படவில்லை. இயல்பான நடமாட்டம். இயல்பான உரையாடல் என்று காட்சிகள் நகர்கிறது.

விதவை பெண்களுக்கும். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் புதிய சமுதாய அறக்கட்டளை  வீடுகள் கட்டி தருவது,  ஜீவ சாந்தி அமைப்பு ஆதரவற்ற பிணங்களை வேனில் சுமந்துய் சென்று அடக்கம் செய்வது அந்த பணி இந்து மதத்தினருக்கும் செய்வதை காட்சிகள் விளக்குகின்றன.

டிவியில் சபரி மலையில் பெண்கள் அனுமதிக்கப்படாத செய்தியை விரிவாக காட்டுவதும், மசூதிக்கு பெண்களை ஐயப்பா சரணம் என்று எழுதிய வேனில் அழைத்துச் செல்வதுமாக காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இந்து பெண் ஒருவரை இஸ்லாம் வாலிபன் மணந்துகொண்டு சந்தோஷமாக வாழும் கிளைக்கதையொன்றும் படத்தில் தொடக்கம்முதல் இறுதிவரை தொடர்கிறது. அந்த வேடத்தில் மோகன், மேனகா,  நடித்திருக்கின்றனர்.

மசூதியில் பணியாறி தொண்டு செய்த ஆதரவற்றவர் உடல் அவரது சொந்த ஊரில் கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்படுவதும், அப்போது அந்த சமாதி நோக்கி ஆடுகள் ஓடிவருவதும்,  சகோதரனின் சொத்தை ஏமாற்றி அபகரித்த பணக்காரர் ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் வேனில் எடுத்துச் செல்லும்போது ரயில்வே கேட் குறுக்கே விழுந்து அந்த இறுதி பயணத்தை தடுப்பதுமாக காட்டி சொர்க்கம், நரகத்தின் பாதையை நாசுக்காக பதிய வைத்திருக்கின்றார் இயக்குனர் : சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

சினிமா பார்க்கும் உணர்வு ஏற்படாமல் ஒரு சில உண்மை சம்பவங்களை  கண்முன் நிறுத்துவதுபோல்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன், பல காட்சிகளில் வசனங்கள் இல்லாத நிலையில் அந்த சீன்களை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

,இன்ஷா அல்லாஹ் –  ஒரு புதிய பதிவு.

 

Related posts

கார்த்தியின் ‘சர்தார்’. வில்லன் காட்சிக்காக ரூ 4 கோடி செலவு

Jai Chandran

Nandamuri Balakrishna’s New Movie Titled Veera Simha Reddy

Jai Chandran

Sai Pallavi Joins Geetha Arts #NC23

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend