படம்: ப்ளூ ஸ்டார்
நடிப்பு: அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்வி ராஜன், பகவதி பெருமாள், பக்ஸ், இளங்கோ குமரவேல், லிசி ஆன்டனி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா
தயாரிப்பு: பா.ரஞ்சித், ஆர் கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: தமிழ் ஏ அழகன்
இயக்கம்: எஸ்.ஜெயகுமார்
பி ஆர் ஒ: குணா
அரக்கோணம் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு இருவரும் எதிரெதிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த வர்கள். ப்ளூ ஸ்டார் அணியின் கேப்டனாக அசோக் செல்வன் இருக்கிறார். இவர்களுக்கிடையே சாதி பாகுபாடு இருப்பதால் எப்போதுமே இரு அணிக்கும் போட்டி எண்ணமும் இருந்து கொண்டே இருக்கிறது. அடிக்கடி இரு அணியைச் சேர்ந்தவர்களும் மோதி கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் ஜெயிப்பது நீயா நானா என்று பார்க்க அசோக் செல்வன் அணியும், சாந்தனு அணியும் நேருக்கு நேர் அணி பிரிந்து விளையாடுகிறார்கள். இதில் அசோக் செல்வன் அணி தன்னுடைய சக வீரர்களை வைத்து விளையாடுகிறார். ஆனால் சாந்தனு கிரிக்கெட் லீகில் ஆடும் கைதேர்ந்த கிரிக்கெட் வீரர்களை அழைத்து வந்து தன் அணியில் ஆட வைக்கிறார். பயிற்சி பெற்ற இந்த கிரிக்கெட் வீரர்கள் அசோக் செல்வன் அணியை தோற்கடிக்கின்றனர். இதில் அசோக் செல்வன் மனம் உடைந்து போகிறார். இந்நிலை யில் சாந்தனு தன் அணிக்காக விளையாடிய கிரிக்கெட் லீக் வீரர்களுக்கு பணம் தரச் செல்கி றார் அங்கு அவரை அந்த வீரர்கள் மதிக்காமல் அவமானப்படுத்தி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். அப்போது அங்கு வரும் அசோக் செல்வன் லீக் அணி வீரர்களை ஒரு கை பார்க்கிறார். பின்னர் அனைவரும் வீடு திரும்பு கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அசோக் செல்வன் அணிக்கு கோச்சாக இருக்கும் பக்ஸ் இரு அணியும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். அதற்கான சந்தர்ப்பம் வருகிறது. இரு அணியும் ஒன்று சேர்த்து கிரிக் கெட் முக்கிய போட்டி ஒன்றில் விளையாட வைக்க போட்டி பட்டியலில் அவர்களை இணைத்து விடுகிறார் பக்ஸ். அசோக் செல்வன் அணி இணக்கமாக ஆடினாலும் சாந்தனு அணியில் உள்ள சிலர் அசோக் செல்வன் அணிக்கு ஒத்துழைப்பு கொடுக் காமல் முரண்டு பிடிக்கின்றனர். அப்படி இப்படி மோதி கடைசியில் ஃபைனலுக்கு வருகிறார்கள். ஃபைனலில் ஏற்கனவே மோதிய கிரிக்கெட் லீக் வீரர்களுடன் மோத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது யார் என்பதற்கு விறுவிறுப்பாக கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
டிப் டாப்பாக அழகான காதலன் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அசோக் செல்வ னுக்கு இப்படத்தில் பி அண்ட் சி சென்டரை கைவசப்படுத்தும் அளவுக்கான ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெற்றிருக் கிறார். அதை நேர்த்தியாகவும் அழகாகவும், விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் செய்து வித்தியாச மான அசோக் செல்வனாக கண் முன் நிற்கிறார். முரட்டுத்தனம், ரவுடித்தனம், முன்கோபத்தனம் கிரிக்கெட்டில் வெறிகொண்டு ஆடக்கூடிய வீரத்தனம் என எல்லாம் ஒருங்கே பெற்ற ஒரு நிறைவான கதாபாத்திரத்தில் அசோக் செல்வனை இதில் பார்க்க முடிகிறது. இந்த கதாபாத்திரத்தை அவர் எப்படி உள்வாங்கி நடித்தார் என்பதுதான் புதிராக இருக்கிறது சீனுக்கு சீன் ஸ்கோர் செய்கிறார்.
எதிரணியாக இருக்கும் சாந்தனு அதே அளவுக்கு முரண்டு, பிடிவாதம், முன்கோபம் எல்லாம் காட்டுகிறார். அவரது கதாபாத் திரமும் அசோக் செல்வன் பாத்தி ரத்திற்கு சற்றும் குறைந்ததாக இல்லை. கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அவரும் வெளிப்படுத்தி இருக்கிறார்
முதல் பாதி படம் வரை இவர்கள் இரண்டு அணியின் மோதல் காட்சிகளாகவே முடிகிறது. இரண்டாம் பாதியில் நடக்கும் முக்கிய கிரிக்கட் லீக் ஆட்டத்தில் அசோக் செல்வன் அணியும் சாந்தனு அணியும் ஒன்றாக இணைந்து ப்ளூ ஸ்டார் அணி என்ற பெயரில் பயிற்சி பெற்ற கிரிக்கெட் லீகில் ஆடும் வீரர் களுடன் மோத தயாராவது விறுவிறுப்பை கூட்டுகிறது. . அசோக் செல்வன் அணியில் விளையாடும் பிருத்திவி பேட்ஸ்மேனாக வெளுத்து கட்டினாலும் அவ்வப்போது அண்ணன் அசோக் உடன் சண்டை போட்டுக் கொண்டு கோபித்துக் கொள்வதும் ஆட வரமாட்டேன் என்று அடம்பிடிப்பதும் காட்சி களுக்கு பிரேக் போடுகிறது.
ஒரு சமயம் தான் காதலிக்கும் பெண்ணை அசோக் செல்வன் காதலிப்பதாக எண்ணி அவர் மீது கடும் கோபம் கொண்டு வம்பு செய்கிறார். ஆனால் பிரித்வியின் காதலியாக வரும் அந்தப் பெண் பிரதிவியிடம் அவர் தன்னை எப்படி எல்லாம் காதலிக்கிறார் என்பதை அவர் சொன்ன ஒரு கவிதை மூலம் சொல்லி தான் காதலிப்பதை சூசகமாக தெரிவிப்பது அரங்கில் உற்சாகம் படரவிடுகிறது.
அசோக் செல்வனும் உடன் படிக்கும் கீர்த்தி பாண்டியனும் ஒருவருக்கு ஒருவர் காதல் சித்து விளையாட்டு விளையாடுகின் றனர். அசோக் செல்வன் மனமுடைந்து போகும் போதெல் லாம் அவருக்கு ஊக்கம் கொடுத்து தேற்றும் கீர்த்தி பாண்டியன் பின்னர் ஒரு கட்டத்தில் வேறு ஒருவரை மணக்க தயாராவது காதலில் பெரிய ட்விஸ்ட்..
இறுதிக்கட்ட கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனின் காதல் தோல்வியை. எண்ணி மனமுடைந்து விளையாட்டில் இருந்து கவனத்தை திசை திருப்பும்போது ரசிகர்கள் மனம் பதைபதைக்கிறது. காதல் தோல்வியால் இந்த அணி தோற்று விடுமோ என்ற எல்லைக்கு ரசிகர் களை கொண்டு செல்வதும் மனதை படபடக்கச் செய்கிறது.
படத்தில் நடித்திருக்கும் சக நடிகர் நடிகைகளும் தங்கள் கதாபாத்தி ரங்களை உணர்ந்து மீட்டர் மீறாமல் நடித்து காட்சிக்கு விறுவிறுப்பு சேர்க்கின்றனர்.
பா ரஞ்சித், ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி சௌந்தர்யா ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்
எஸ். ஜெயக்குமார், தமிழ் பிரபா இணைந்து இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார்கள். அரக்கோணம் பின்னணியில் 80 காலகட்ட கதையாக இது உருவாகி இருக்கிறது.
தமிழ் ஏ அழகன் இப்படத்தின் ஒளிப்பதிவை 80 காலகட்டங் களின் பின்னணியில் உருவாக்கி இருப்பது மனதில் அச்சாக பதிகிறது.
கோவிந்த் வசந்தா தன் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எந்த அதிக பிரசிங் கித்தனமும் செய்யாமல் காட்சிக்கு ஏற்ற இசையமைத்து இயல்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருக் கிறார்.
இயக்குனர் எஸ் ஜெயக்குமார் எப்படி எல்லாம் இப்படத்தின் காட்சிகளை அமைக்க வேண்டும் அசோக் செல்வனும் சாந்தனுவும் எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று மனதில் கற்பனை செய்தா ரோ அப்படியே காட்சிகளை அவர்க ளுக்குள் செலுத்தி அதனை படமாக்கி இருப்பது இயக்குனரின் வெற்றி.
என்னதான் கிழிந்த சட்டையை ஒட்டு போட்டாலும் அது மறுபடியும் கிழிந்து தான் போகும் என்ற ஒரு எதார்த்தத்தையும் இயக்குனர் அவ்வப்போது சுட்டிக் காட்டி சமுதாயத்தின் நிலை அப்படி இருக்கிறது என்பதை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
ப்ளூ ஸ்டார் – எவனோ ஒருவன் நம்மை அடித்தால்தான் நமக்குள் ஒற்றுமை பிறக்கும் என்பதை ஊமை குத்தாக அல்ல செம குத்தாக குத்தியிருக்கிறார்கள். சபாஷ்.