Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தலைநகரம்2 ( பட விமர்சனம்)

படம்: தலைநகரம்2

நடிப்பு: சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா,

தயாரிப்பு: பிரபாகரன் எஸ்.எம்., துரை வி. இசட்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: கிருஷ்ணசாமி

இயக்கம்: துரை வி .இசட். துரை

பி ஆர் ஒ: சதீஷ், சதீஷ்குமார், சிவா

சுந்தர்.சி. வடிவேலு நடிப்பில் ஏற்கனவே தலைநகரம் முதல்பாகம் வெளியானது அப்படத்தின் 2ம் பாகமாக தலைநகரம்2 உருவாகி யுள்ளது.  முதல் பாகத்தில் நடித்த சுந்தர் சி  மட்டுமே ரைட் என்ற அதே ரவுடி கதாபாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில்  நடித்திருக்கிறார் மற்ற  எல்லோருமே வேறுவேறு நடிகர்கள்தான்.

முதல் பாகத்தில் செய்யாத ஆக்ஷன் காட்சிகளை 2ம் பாகத்தில் செய்திருக்கி றார் சுந்தர்.சி.

நகரை வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என்று பிரித்துக் கொண்டு நஞ்சுண்டா, வம்சி, மாறன் ஆகிய  3 ரவுடிகள் அதகளம் செய்கின்றனர். ஒருவருக் கொருவர் போட்டியால் ஒருவரையொருவர் கொன்றுவிட்டு ஒருவரே பெரிய ரவுடியாக மாற முயல்கின்றனர். இவர்க ளுக்கிடையே ரவுடி யிஸத்தை விட்டு ஒதுங்கி வாழும் ரைட் ( சுந்தர் சி) தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்கிறார்.  ஆனாலும் மற்ற 3 ரவுடிகளும் ஏதோ ஒரு வகையில் அவரை சீண்டு கின்றனர்.  மீண்டும் ரவுடியிஸத்தை கையிலெ டுக்கும் ரைட் மற்ற 3 ரவுடி களையும் எப்படி ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் என்பதே கதை.

தலைநகரம் முதல் பாகத்தில் வடிவேலு காமெடி பிளஸ் ஆக அமைந்தது 2ம் பாகத்தில் வடிவேலுவும் இல்லை காமெடி வாசனையும் இல்லை. இரத்த வாடை தான் சீனுக்கு சீன் வீசுகிறது.

சுந்தர்.சியின் வித்தியாச மான ஹேர் ஸ்டைல், அவரது தெனாவட்டு நடை கேரக்டரை தாங்கிப்பிடிக் கிறது. தன் வீட்டு நாயை கடத்திவிட்டர்கள் என்பதற் காக 17 செகண்டில் 6 ரவுடிகளை அடித்து துவம்சம் செய்வது  தெறி. சுந்தர்.சி படம் முழுவதும் நடக்கிறார் அடிக்கிறார்.

நடிகையாக வரும் பாலக் லால்வானி இளசுகளுக்கு இளமை விருந்து படைக் கிறார். டூ பீஸ் உடையில் கிரங்க வைக்கிறார். ஆனால் எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் ஏறெடுத்தும் பார்க்காததுதான் சுந்தர் சி கதாபாத்திரம். நெருங்கி வந்து காதலை சொல்லும் போதும் சுந்தர் சி ஒதுங்கி  செல்வதும்,  தனது பழைய காதலியை நினைத்து ஏங்குவதும் வேடத்துக்கு வலு.

ஆஜான பாகுவாக வரும் 3 ரவுடிகள் தங்கள் இஷ்டம் போல் உருட்டல் மிரட்டல் விடுத்து பயமுறுத்துகின் றனர்.  தம்பி ராமையா கறிவேப்பிலை கொத்தாக பயன்பட்டிருக்கிறார்.

பிரபாகரன் எஸ்.எம்., துரை வி. இசட்  தயாரித்திருக் கிறாரகள். ஜிப்ரான் இசை சராசரி.

ஆக்ஷன்மூட் கடைசிவரை தக்க வைக்கிறார் ஒளிப்ப திவாளர் கிருஷ்ணசாமி.

இயக்குனர் துரை வி .இசட். தனது வழக்கமான ஆக்ஷன் மிரட்டலை இதிலும் முத்திரையாக பதித்திருக்கிறார்.த லைநகரம்2  முழுக்க முழுக்க ஆக்ஷnன் கதை என்பதால்  இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பதுபோல் மருந்துக்கு கூட காமெடியை வைக்க இல்லை..

தலைநகரம் 2 ஆக்ஷன் பிரியர்களுக்கு

 

 

 

 

Related posts

25வது கல்யாண நாளில் விஜயகாந்த்திடம் ஆசி பெற்ற எல்.கே.சுதீஷ்

Jai Chandran

Actress Vanitha Vijayakumar Walked out of BBJODIKAL Show

Jai Chandran

பாணி மாறும் ரகுமானின் “பேட் பாய்ஸ்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend