Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க. முன்னாள் தலைவர் கே.முரளிதரன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான கே.முரளிதரன் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந் தேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தி னருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர்  என் ராமசாமி  தலைமையில்  சங்க நிர்வாகிகள் அறிக்கை வெளியிட் டுள்ளார்கள் அதில் கூறியதாவது:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து தேர்தலில் தலைவராக வெற்றி பெற்று சிறப்பாக பணியாற்றிய எல் எம் எம் என்று எல்லோராலும் பிரியமாக அழைக்கப்பட்டு வந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான கே. முரளிதரன் அவர்கள் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது. அவர் கமலஹாசன் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை வைத்து அன்பே சிவம், வீரம் வெளஞ்ச மண்ணு, மிஸ்டர். மெட்ராஸ் கோகுலத்தில் சீதை, அரண்மனை காவலன், வேலுச் சாமி, ப்ரியமுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து ஆகிய மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்கள்

TFPC

Related posts

பெத்லேகம் குடும்ப யூனிட் (பட விமர்சனம்) 

Jai Chandran

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் கர்ஜிக்க தயாரானது ‘ஜெய் பீம்’

Jai Chandran

Rise East Entertainment wishing Director #KiruthigaUdhayanidhi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend