Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கட்டா குஸ்தி (பட விமர்சனம்)

படம்: கட்டா குஸ்தி

நடிப்பு: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஸ் காந்த், காலி வெங்கட், ரெடின் கிங்க்ஸ்லி, ஹரிஸ்பெராடி

தயாரிப்பு: விஷ்ணு விஷால், ரவிதேஜா

இசை:ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு : ரிட்சர்டு நாதன்

இயக்கம்: செல்லா அய்யாவு

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்மூவிஸ்

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

பெற்றோரை சிறுவயதி லேயே இழந்த வீரா ( விஷ்ணு விஷால்) மாமாவின் ( கருணாஸ்) அரவணைப்பில் வளர்கிறான். அதிகம் படிக்காத வீராவுக்கு சொந்த வீடு நிலம் உள்ளது. அதில் வரும் வருமானத்தை வைத்து வாழும் வீரா மாமாவுடன் ஊர் பஞ்சாயத்து, கோயில் விழா என்று சுற்றுகிறான். அவனுக்கு பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. தனக்கு வரும் பெண் நீண்ட கூந்தலுடன் இருக்க வேண்டும், குறைவாக படித்திருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் அப்படி எந்த பெண் கிடைக்க வில்லை. இந்நிலையில் கட்டா குஸ்தி வீராங்கனை கீர்த்தியை (ஐஸ்வர்யா லட்சுமி) பெண் பார்க்க செல்கிறான். கண்டிஷனுக்கு ஏற்ப அவரை சிங்காரித்து வீராவுக்கு கட்டி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் கீர்த்தி கட்டா குஸ்தி வீராங்கணை என்று தெரியவர அவர் மீது கோபம் அடைந்து தாய் வீட்டுக்கு திருப்பி அனுப்புகிறான் வீரா. அவருக்கு தான் ஒன்றும் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபிக்க கீர்த்தியுடன் நேருக்கு நேர் கட்டா குஸ்தியில் மோத முடிவெடுக்கிறான். போட்டியில் இருவரும் களம் இறங்குகின்றனர். அடுத்து நடந்தது என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.

விஷ்ணு விஷால் கதை தேர்வில் தேர்ந்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு குடும்பங்கள் ஒன்றாக வந்து பார்க்கும் விதமாக கட்டா குஸ்தி கதையை தேர்வு செய்திருக் கிறார்.

தொடக்கம் முதலே காமெடி களத்தில் காட்சிகள் தொடங்குவ தால் கிளைமாக்ஸ் வரை அரங்கில் சிரிப்பும், கரவொலியும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

ஒருபக்கம் விஷ்ணு விஷால் பெண் பார்க்கச் சென்று பார்க்கும் பெண்ணையெல்லாம் ரிஜெக்ட் செய்ய மறுபக்கம் ஐஸ்வர்யா லட்சுமியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை குடும்பத்தினர் அவர் குஸ்தி வீராங்கனை என தெரிந்ததும் தெறித்து ஓடுவதும் நான் ஸ்டாப் காமெடிகள்.

ஐஸ்வர்யா லட்சுமிக்கு 6 அடி கூந்தல் விக் வைத்தும் பி எஸ் சி படித்த வரை , 7ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார் என்று பொய் சொல்லி விஷ்ணுவுக்கு கட்டி வைத்தபிறகு உண்மை தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

முதலிரவு அறையில் தனது விக் உறங்கிக் கொண்டிருக்கும் விஷ்ணுவின் வயிற்றுக்கு அடியில் சிக்கிக் கொள்ள அதை எடுக்க ஐஸ்வர்யா பாடாய்படுவதும், குளித்துவிட்டு வரும் ஐஸ்வர்யாவை தலைக்கு குளித்து விட்டு வரும்படி விஷ்ணு கூற குளியல் அறையில் விக்கை கழற்றி ஷாம்பு போட்டு அடித்து துவைத்து பிழிவது வயிற்றை பதம் பார்க்கிறது.

கோயில் திருவிழாவில் ரவுடிகள் விஷ்ணுவை தாக்கியதும் அவர்களை அதிரடியாக தாக்கி ஐஸ்வர்யா பறக்க விடுவதைக் கண்டு விஷ்ணு விஷால் அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்க்கும்போது அரங்கே அல்லோகல்லப்படு கிறது.

கிளைமாக்ஸில் கட்டா குஸ்தியை 15 நாளில் கற்றுக்கொண்டு திறமையான வீரருடன் விஷ்ணு விஷால் மோதும் காட்சியில் அனல் பறக்கிறது. தனது வெற்றியை மனைவிக்கு சமர்ப்பிப்பதாக விஷ்ணு சொல்வது மனதை நெகிழ வைக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இளசுகளை கவர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கட்டா குஸ்தி வீராங்கனையாக  நடிப்பில் வெளுத்து கட்டுகிறார். இதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து எதிரிகளை தோள் மீது தூக்கி வைத்து அநாயிசமாக வீசியெறியும்போது அப்ளாஸ் பெறுகிறார். ஆக்‌ஷனும் அத்துபடி நடிப்பும் அத்துபடி என்பதை இப்படத்தில் நிரூபித் திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியை இனி வெரைட்டி கதாபாத்திரங் களில் பார்க்கலாம்.

விஷ்ணு விஷாலின் தாய் மாமனாக வரும் கருணாஸ் விஷ்ணுவிடம் மனைவியை கட்டுப்பாட்டில் வை என்று அடிக்கடி  ஏற்றிவிட்டு உசுப்பேற்றி நாரதர் வேலையை நன்றாக செய்திருக் கிறார்.

முனிஸ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்க்ஸ் லி என நகைச்சுவை கூட்டம் சிரிப்பு விருந்து படைக்கின்றனர்.

விஷ்ணு விஷால் ., தெலுங்கு ஹீரோ ரவி தேஜா இணைந்து படத்தை படத்தை தயாரித்திருக் கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் தாளம்போட வைக் கிறது.

ரிட்சர்டு நாதன் கலர் ஃபுல்லாக காட்சிகளை பகாக்கியிருக்கிறார்.

இயக்குனர் செல்லா அய்யாவு குடும்பபாங்குடன் ஒரு காமெடி படத்தை கமர்ஷியல் அம்சங் களுடன் இயக்கி உள்ளார். இன்னும் கூட காமெடிக்கு இடம் கொடுத்திருந்தால் ரசனைக்கு பஞ்சமிருந்திருக்காது.

கட்டா குஸ்தி- கணவன் மனைவி ஜோடியாக பார்த்தால் அவர்க ளுக்குள் இருக்கும் ஈகோ மறைந்து போகும்.

Related posts

பிளாக் ஷீப் டிவிக்காக 90ஸ் தொகுப்பாளர்கள்

Jai Chandran

Actor-Producer @AnilKapoor watched #Rocky

Jai Chandran

மாயோனையும் பக்ரீத்தையும் இணைக்கும் நிலா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend