படம்: சக்ரா
நடிப்பு: விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா, ரோபோ சங்கர், மனோபாலா,
தயாரிப்பு: விஷால் ஃபிலிம் பேக்டரி
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு:கே.டி.பாலசுப்ரமணியம்
இயக்கம்: எம்.எஸ்.ஆனந்தன்
ராணுவத்தில் பணிபுரியும் விஷால் தனது பாட்டி தங்கி இருந்த வீட்டில் கொள்ளை நடந்தது என்ற தகவல் அறிந்து வீடு திரும்புகிறார். வந்த இடத்தில் தனது வீட்டில் கொள்ளை போனதுடன் வீர சேவையை பராட்டி அவரது தந்தைக்கு கொடுத்த வீர பதக்க மும் கொள்ளையடித்து சென்றது கண்டு கோபம் அடைக்கிறார் விஷால். இந்த வீடு உள்பட 50 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டதால் போலீஸும் தீவிர முயற்சியில் இறங்குகின்றனர். அவர்க ளுடன் இணைந்து விஷால் துப்பறியும் வேலையில் ஈடுபடுகிறார். அவரால் அந்த கொள்ளையர்களை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
விஷாலுக்கு கைவந்த கலையான அதிரடி ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் புத்திசாலித்தனத்துக்கும் சவால் விடுக்கும் கதையாக வும் அமைந்திருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது. தந்தைக்கு மத்திய அரசு தந்த சக்கரா பதக்கம் காணாமல் போன ஆத்திரத்தில் இருக்கும் விஷாலிடம் தங்கபதக்கம் பற்றி வீணாக பேசி அடிவாங்கி திண்ணும் மனோ பாலா கலகலக்க வைக்கிறார்.
போலீஸ் துறையினருடன் முழுவதுமாக இணைந்து விஷால் தனது துப்பறியும் பணிகளை மேற்கொண்டு டெக்னிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் கண்டறிவதும் ஒரு கட்டத்தில் கொள்ளை அடித்தது ஆண் இல்லை ஒரு பெண் என்று சொல்லி ஆச்சர்ய மூட்டுகிறார். யார் அந்த புது வில்லி என்று பார்த்தால் ரெஜினாவை வெளிக்கொண்டு வருகிறார்கள். அவரும் தெனா வட்டு நடிப்பால் கவர்கிறார்.
ரெஜினா பதுங்கி இருக்கும் லொகேஷனை கண்டறிந்து அவரை பிடிக்கச் செல்லும் விஷால் அங்கு சுவற்றில் இருக்கும் குறியீட்டை கண்டு அது செஸ் ஆட்டத்தில் வரும் குயின் காயினின் குறியீடு என்று கண்டுபிடிப்பதும் அதைக்கொண்டு மற்ற விஷயங்களை அலசுவதுமாக காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார்கள்.
ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் எல்லாம் புத்தி கூர்மைக்கான காட்சிகளாக அமைத்திருக்கி றார் இயக்குனர். அதுவும் கம்ப்யூட்டர் ஆப் களை எப்படியெல்லாம் தவறான வேலைக்கு பயன்படுத்து கிறார்கள் என்பதை தோலுரித்துக்காட்டுகிறார்.
ரோபோ சங்கர் அதிகாரிகள் பேசும்பொது குறுக்கே புகுந்து கமெண்ட் அடித்து காமெடி செய்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெண் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் விஷால் வரும் காட்சிகளில் சிலைபோல் நிற்கிறார்.
போலீஸ் நிலயத்துக் குள்ளேயே தாக்குதல் நடத்தும் ரெஜினாவின் தம்பிகளை வளைத்து பிடிக்காமல் அவர் களிடம் குத்துப்பட்டு விழும் போலீஸ் கூட்ட காட்சியை வேறு விதமாக யோசித்திருக் கலாமோ என்று தோன்று கிறது.
விஷால் ஃபிலிம் பேக்டரி படத்தை தயரித்திருக்கிறது. எம்.எஸ்.ஆனந்தன் ஆன்லைன் மோசடிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை ஊட்டம் தருகிறது.
சக்ரா- புத்திசாலியின் புலிப் பாய்ச்சல்
.