படம்: செம திமிரு
நடிப்பு: துருவா சர்ஜா, ராஷ்மிகா மற்றும் பலர்
தயாரிப்பு:பி.கங்காதர், எஸ்.சிவா, அர்ஜுன்
இசை: சந்தன் ஷெட்டி
ஒளிப்பதிவு: விஜய்மில்டன்
இயக்கம்: நந்த கிஷோர்
ரிலீஸ்:டி.முருகானந்தம்
சிறுவயதில் தந்தையை பறிகொடுக்கும் துருவா சர்ஜா தனது தாய் வேறு திருமணம் செய்துகொண்டாலும் அதை உதறிவிட்டு தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார். அவர் வர மறுக்கிறார். தாயின் வரவுக்காக தனியாக வாழ்ந்துவரும் துருவா அந்த பகுதியில் ரவுடி ராஜ்யம் நடத்துகிறார். ஐயர் வீட்டுப் பெண் ராஷ்மிகா மீது காதல் கொள்கிறார். ஒரு பக்கம் காதல் என்று சுற்றினாலும் ரவுடித் தனத்தை கைவிடாமல் வலம் வருகிறார். பணத்துக்காக எதையும் செய்யத் துணிகிறார். கார்ப்பரேட் கம்பெனிக்காக ஏழைகளை விரட்டி அடிக்கிறார் துருவா. ஒரு கட்டத்தில் தங்கையையும் பணயம் வைக்கிறார். துருவாவின் இந்த போக்கு ஊர்மக்களையும் அவரது தாயையும் கோபத்தில் ஆழ்த்துகிறது. இதற்கிடையில் தங்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக துருவாவை கார்ப்பரேட் முதலாளி தீர்த்துக் கட்ட ரவுடி கூட்டத்தை அனுப்புகிறார். அவர்களை வீழ்த்தி தாயின் அன்பை எப்படி பெறுகிறார் என்பதை முரட்டுத்தனமாக சொல்கிறது கதை.
கன்னட நடிகர் துருவ சர்ஜா நடிப்பில் முதன்முறையாக தமிழில் டப்பிங் ஆகி வந்திருக்கும் படம் செம் திமிரு. இவர் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் தங்கை மகன்.
துருவா சர்ஜா தனி ஆளாக படம் முழுவதும் ஆர்ப்பாட் டம் செய்திருக்கிறார். அவரது முரட்டுதனமும், நீண்ட ஜடா முடியும், திரண்டு நிற்கும் தோள் பலமும் ஒன்றாக சேர்ந்து வேடத்தை வலுவாக்குகிறது. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு அவர் ஆடியிருக்கும் நடனம் ஆச்சர்யமூட்டுகிறது. தன்னை தாக்க வரும் எதிரிகளை ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வீழ்த்துவதும், கிளைமாக்ஸில் வரும் உலக பயில்வான்களுடன் நடத்துதும் மோதலும் அதிர வைக்கிறது.
ராஷ்மிகாவை விடாப்பிடியாக சுற்றி வந்து காதலிப்பதும் அவரது உறவினர்களை பயமுறுத்துவமாக கலகலக்க வைக்கிறார் துருவ்.
அடிதடி ரவுடி கதையாக இருந்தாலும் தாய் சென்ட்டிமென்ட், தங்கை சென்டிமெட் வைத்து படத்தை ரசிக்கும்படி இயக்கி இருக்கிறார் நந்த கிஷோர்.
ஐயர் வீட்டு பெண்ணாக வரும் ராஷ்மிகா கொடுத்த் வேடத்தை நிறைவு செய்திருக்கிறார். காதலைவிட ஆன்ஷ னுக்கும் அம்மா சென்டிமென்ட்டும், அதிக முக்கியதுவம் தரப்பட்டிருப்பதால் ராஷிமிகாவால் தனிமுத்திரை பதிக்க முடியவில்லை.
நம்மூர் விஜய் மில்டன் ஒளிப் பதிவு ஆக்ரோஷத்தை யும் சென்டிமென்ட்டையும் வேறுபடுத்தி காட்டி இருக்கிறது. சந்தன் செட்டி இசை படம் முழுக்க இடைவிடாமல் ஒலிக்கிறது.
எல்லா காட்சிகளும் சாட்சியாக நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும் ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது.
செம திமிரு- நிமிர வைக்கும் ஆக்ஷன் அதிரடி.
previous post
next post