Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கிங்டம் (பட விமர்சனம்)

படம் கிங்டம்

நடிப்பு: விஜய் தேவர கொண்டா, சத்யதேவ், பாக்ய ஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர்

தயாரிப்பு: நாக வம்சி, சாய் சௌதன்யா

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: கிரிஷ் ,கங்காதரன்

இயக்கம்: கௌதம் தின்னனூரி

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

தமிழ்நாடு ஆந்திரா கடற்கரை பகுதியிலிருந்து இலங்கை தீவில் கடல் வழியாக கடத்தி வரப்படும் தங்க கட்டிகளை கொண்டுவரும் வேலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் கொத்தடிமைகளாக இருந்து செய்து வருகிறார்கள். அவர்களை அங்கிருக்கும் சில பண முதலைகள் தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் சிட்டுக்குருவியை போல் சுட்டுத் தள்ளுகிறார்கள். இந்த கூட்டத்தை கண்காணிக்க உளவாளியாக அனுப்பப்படுகிறார் விஜய் தேவரகொண்டா அத்துடன் சிறுவயதிலேயே தன்னை விட்டு பிரிந்து சென்ற அண்ணனையும் தேடி அங்கு செல்கிறார். அடிமையாக அவரும் வேலை செய்து அண்ணனை கண்டுபிடிப்பதுடன் பண முதலைகளை எதிர்த்து போர் தொடுக்கிறார். இந்தப் போரில் அடிமை  கூட்டம் வீழ்கிறதா? பண முதலைகள் அழிகிறார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் ஆக்சன் அதிரடியுடன் பதில் அளிக்கிறது.

விஜய் தேவர கொண்டாவை இதுவரை லவ்வர் பாயாகவே பார்த்து ரசிகர்களுக்கு இப்படத்தில் ரக்கட் பாய் தோற்றத்தில் வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

உளவாளியாகவும் அண்ணனை தேடி செல்லும் பாசகாரா தம்பியாகவும் இரண்டு உணர்வுகளை தாங்கி இலங்கை தீவிற்கு செல்லும் விஜய் தேவரகொண்டா அங்கு அண்ணனைக் கண்டு மகிழ்வதும், உளவாளியாக இருந்து போலீசுக்கு கடத்தல்காரர்களின் தகவல்களை தருவது என நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

காட்டு வழியில் கடற்படை கொண்டு செல்லும் தங்க கட்டிகள் அடங்கிய பெட்டியை கொள்ளையடிப்பதற்கு விஜய் தேவர கொண்டா போடும் திட்டமும், பின்னர் கடற்படையினர் அவரை மிஷின் கன்னுடன்  முற்றுகையிட்டு தாக்குவதும் என்ன நடக்குமோ என்ற பரபரப்பை அதிகரிக்கிறது.

கடத்தல் பண முதலைகள், கொத்தடிமைகள் என்று கதை நகர்ந்தாலும் இன்னொரு பக்கம் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ் ஆகியோரின் சகோதர பாசப் போராட்டம் கதையை  சென்டிமெண்டாக தாங்கி நிற்கிறது.

நாக வம்சி, சாய் சௌதன்யா தயாரித்திருக்கின்றனர்.

அனிருத் காது துளைக்கும் இசை யாரையும் கண் அசர விடாது.

கிரிஷ்,  கங்காதரன் ஒளிப்பதிவு பிளாக் அண்ட் ரெட் மோடில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது

கொத்தடிமைகள் என்ற ஒரு சிறு கருவை வைத்துக்கொண்டு பான் இந்தியா படமாக உருவாக்குவதற்கு படத்தில் காட்சிகளை பிரமாண்டமாகி இருக்கிறார் இயக்குனர் கௌதம் தின்னனூரி

கிங்டம் – கொத்தடிமைகளின் புரட்சி.

By

Jayachandhiran. k.

www.trendingcinemasnow.com

 

 

Related posts

20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் சரத்குமார்

Jai Chandran

சேரன் நடிக்கும் தமிழ்க்குடிமகன் கதை பேசும் சாதி ஒழிப்பு

Jai Chandran

Karthi Celebrated Diwali in Dubai labour Camp

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend