Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வு..

அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு குறித்த 2026 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வ சென்னையில் கிரியா நடத்தியது!.

உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) கொண்டாடும் உலக அறிவுசார் சொத்து தினம் 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு, முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட சேவைகளை வழங்கி வரும் கிரியா லா நிறுவனம், ‘ஐபி அண்ட் ஸ்போர்ட்ஸ்: ரெடி, செட், இன்னோவேட்’ தலைப்பின் கீழ் அரை நாள் நிகழ்வை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தியது.

இந்த நிகழ்வில் நிறுவனங்கள், சட்ட நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் முனைவோர் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு துறையில் அறிவுசார் சொத்து உரிமையின் (IP) அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து நிகழ்வில் முக்கியமாக கலந்துரையாடினர். குறிப்பாக வீரர்களின் உரிமைகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வருமானமயமாக்கல் முறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜி. ராஜாராமன், சோமதேவ் தேவவர்மன், சுதா ஷா, டாக்டர் சுப்ரஜித் சந்தா, சித்தார்த் ராமன், வசந்த் பரத்வாஜ் மற்றும் விஷால் ஜெய்சன் ஆகியோர் நிகழ்வில் முக்கிய உரையாற்றினர்.

முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் சோமதேவ் தேவவர்மன் பேசுகையில், “அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு என இந்த இரண்டும் இணைவது, வீரர்கள் தங்களின் தனிப்பட்ட பிராண்டுகளை பாதுகாக்கவும், வருமானம் ஈட்டவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. ராயல்டி அடிப்படையிலான கட்டமைப்புகள் போன்றவை அனைத்து தரப்பினருக்கும் நீடித்த மதிப்பை வழங்கும்” என்றார்.

ஸ்போர்ட்ஸ் இண்டர்ஆக்டிவ் நிறுவனத்தின் சித்தார்த் ராமன் பேசுகையில்,
“இன்றைய மாற்றமடைந்து வரும் விளையாட்டு சூழலில், மீடியா உரிமைகள் முதல் வீரர்களின் பிராண்டிங் வரை அறிவுசார் சொத்து மிக முக்கிய பங்காற்றுகிறது” என்றார்.

கிரியா லா நிறுவனத்தின் ஸ்போக்ஸ்பர்சன் பேசுகையில்,
“அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு என இரண்டும் இணையும் இந்த துறை, கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான மதிப்பை உருவாக்கும் பெரிய வாய்ப்பாக உள்ளது” என்றார்.

இந்த நிகழ்வில் ‘KRIA’tive Innovation Awards 2026’ விருதுகளின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இவ்விருதுகளுக்கு 460 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பப்பட்டிருந்தது. மேலும், IPASI பிக்கல்பால் போட்டி வெற்றியாளர்களும் இந்த நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வை கிரியா லா நிறுவனம் WIPO, INTA மற்றும் iTNT Hub ஆகியவற்றுடன் இணைந்து நடத்தியது. அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு துறைகளின் இணைப்பில் தொடர்ந்து உரையாடலும் புதுமையும் அவசியம் என்பதையும் வலியுறுத்தியது.

கிரியா என்பது சென்னை மற்றும் டெல்லியில் அலுவலகங்களைக் கொண்ட முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட நிறுவனம். இது 130 க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பின் மூலம் முழுமையான சேவைகளை வழங்குகிறது.

Related posts

PushpaRaj dominance First & Fastest 1.5M+ liked

Jai Chandran

Noise and Grains forays into film production

Jai Chandran

மனிதன் தெய்வமாகலாம் பட இசை வெளியீட்டு விழா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend