படம்: தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா
நடிப்பு: ராமன், லக்ஷ்மணன் ராவணன் , அனுமன் கார்ட்டூன் கதாபாத்திரங்கள்
தயாரிப்பு: அர்ஜுன் அகர்வால், சிபி கார்த்திக்,. டொமோட் கொசானோ (கிரீக் பிக்சர்ஸ் லிமிடெட்)
இசை: விதாத் ராமன், நோகோ அசாரி
இயக்கம்: வி. விஜயேந்திர பிரசாத்
பி ஆர் ஓ: யுவராஜ்
ராமாயண கதை இதுவரை புத்தக வடிவிலும் , திரைப்பட வடிவிலும் டிவி சீரியல் வடிவிலும் நிறைய வந்திருக்கின்றன. அந்த வரிசையில் தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா என்ற ராமாயண கதை கார்ட்டூன் படமாக உருவாகி இருக்கிறது.
ராமாயண கதையை சொல்லவும் வேண்டுமா ? ராமனின் மனைவி சீதையை ராவணன் கடத்திச் சென்று இலங்கை அசோகவனத்தில் சிறை வைக்கிறான். சீதையை ராமன் எப்படி வானர படை கொண்டு போர் தொடுத்து மீட்டு வருகிறார் என்பது தான் கதைக் கரு.
எத்தனை விதமாக ராமாயண கதையை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது. ஏனென்றால் அது இந்துக்களின் புனித புராணம் மட்டுமல்ல ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் ஆழமான கதை.
தி லெஜன்ட் ஆப் பிரின்ஸ் ராமா திரைப்படம் என்னதான் கார்ட்டூன் வடிவில் சொல்லப்பட்டிருந்தாலும் ராமன், சீதை, லட்சுமணன், ராவணன், அனுமன் போன்ற கதாபாத்திரங்களுக்கு வரையப்பட்டிருக்கும் உருவங்கள் அப்படியே அந்த கதாபாத்திரங்களை நேரில் பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை அளித்திருப்பது ஆச்சரியம்.
ராமரின் முகத்தில் அன்பும், பரிவும், பாசமும் வெளிப்படுவது மனதை வருடுகிறது. அதேபோல் சீதை தோற்றத்தில் எளிமையும், அமைதியும் பொங்குவது அழகு.
ராவணன் கதாபாத்திரத்திற்கு ஆஜானபாகு தோற்றம், முறுக்கு மீசை, கட்டு மஸ்தான உடற்கட்டு கம்பீரமான முக பாவணைகள் என உருவம் பயமுறுத்துகிறது.
அது போன்று கும்பகர்ணன் விண்ணுக்கும் மண்ணுக்கும் உடல் பெருத்து நிற்கும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.
போர் முனையில் கும்பகர்ணன் நடந்து வருவதும் அவரது கால் கட்டை விரலுக்கும் கீழாக வானரப் படைகள் உருண்டு ஓடுவதெல்லாம் கற்பனைக் கெட்டாத கலகலப்பான காட்சிகளாக மாறி இருக்கிறது.
அசோகவனத்தில் இருக்கும் சீதையை அனுமன் கண்டு “நான் ராம தூதன்” என்பதை அறிவிப்பது, ராவணனிடம் ராமர் சார்பில் அங்கதன் தூது செல்வது,
கும்பகர்ணன் மகன்கள்
கும்பன், நிகும்பன் ராம படைகளை எதிர்த்து போர் புரிவது, இந்திரஜித் மாய வித்தை போர்,.l சுக்ரீவன் தாக்குதல் எல்லாமே ஒன்றுக்கொன்று குறைவில்லாமல் போர்க்களத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
குறிப்பாக ராமர் உடன் ராவணன் 10 தலைகளுடன் மோதும் காட்சி இதுவரை காணாத காட்சியாக பிரமிக்க வைக்கிறது.
லட்சுமணன் அடிபட்டு விழுந்தவுடன் அவரை கண்விழிக்க வைப்பதற்காக இமய மலையை அனுமன் பெயர்த்து கொண்டு வரும் காட்சிகள் கூட கண்களை அகலவிரிக்க செய்கிறது.
ராமர் கதாபாத்திரத்திற்கு செந்தில்குமார் பாசம் வெளிப்படும் வகையில் டப்பிங் செய்திருக்கிறார். அதேபோல் சீதாவுக்கு டி.மகேஸ்வரி, ராவணனுக்கு பிரவீன் குமார், லட்சுமணனுக்கு தியாகராஜன், அனுமனுக்கு. லோகேஷ் குரல் கொடுத்திருக்கிறார்கள். ரவுரி ஹரிதா படம் நெடுகிலும் தரும் கதை விளக்கம் காட்சிகளை எளிதில் புரிய வைக்கிறது.
ராவணனை ராமன் அழித்த பிறகு இலங்கையின் அரச பொறுப்பு யாரிடம் ராமர் ஒப்படைக்கிறார் என்பது மேலோட்டமாக. ராமாயணம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அந்த பொறுப்பை ராமர் ஒப்படைக்கும் காட்சியும் தீப்பற்றி எரிந்த இலங்கை எப்படி இயல்பு நிலைக்கு திரும்பியது என்பதையும் கற்பனைக்கு எட்ட செய்கிறது.
3D வடிவில் இந்த படத்தை உருவாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.க்
தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா – குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும்.ராமாயண படம்.