Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ் பட விமர்சனம்

படம்: மிஸ்டர் எக்ஸ்

நடிப்பு: ஆர்யா, கௌதம், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட், ஜெயப்ரகாஷ் இவர்களுடன் முக்கிய வேடத்தில் சரத்குமார்

தயாரிப்பு: எஸ் லட்சுமண் குமார், வினித் ஜெயின்

இசை: திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்

இயக்கம்: மனு ஆனந்த்

பிஆர்ஓ : A ஜான்

கதை பனி படர்ந்த நந்தாதேவி மலைப் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான நியூக்ளியர் டிவைஸ் ஒன்று தொலைந்து விடுகிறது. இதையறிந்த எதிரி நாடுகள் அந்த டிவைஸை கைப்பற்றி அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த முயல்கிறார்கள். ஆனால் இந்தியா உளவுத்துறை எப்படியாவது அந்த  டிவைஸை எதிரிகளிடமிநியூக்ளியர்ருந்து கைப்பற்ற உளவு அதிகாரிகள் ஒரு டீமாக செயல்பட்டு அதனை கைப்பற்ற தீவிர நடவடிக்கையில் இறங்குகிறார்கள் அப்போது பல்வேறு தடங்கல்கள் எதிர்ப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர். இதற்கிடையில் ராணா என்ற ஒரு மர்ம மனிதன் அந்த டிவைஸை கைப்பற்றி வெளிநாட்டுக்கு விற்க திட்டமிடுகிறான். இந்த மோதலில் யார் வெல்கிறார்கள் என்பதற்கு திருப்பங்களுடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்..

நியூக்ளியர் டிவைஸ், உளவுத்துறை, வெளிநாட்டு சதி என விஞ்ஞான ரீதியாக கதை வடிவமைக்கப்பட்டிருந் தாலும் அதற்குள் தங்கை சென்டிமென்ட், குடும்ப
சென்டிமெண்ட், காதல்9 சென்டிமெண்ட் போன்ற உணர்வுகளை பிணைந்து திரைக்கதை அமைத்திருப்பது கதையில் அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களை தர உதவியிருக்கிறது.

உளவுத்துறை டீமில் அதிகாரியாக மஞ்சு வாரியார் செயல்பட அவரது கட்டளைகளை ஏற்று செயல்படும் அதிகாரியாக ஆர்யா நடித்திருக்கிறார். எதிரிநாட்டுக்கு வேலை செய்யும் வில்லன் வேடத்தை ஏற்றிருக்கிறார் கௌதம். இந்த மூவரில் பெயரை தட்டிக் கொண்டு செல்வது மஞ்சு வாரியர்தான். ஸ்டைலான நடிப்பு, வேகமான செயல்பாடுகள் கிளைமாக்ஸ் தெருக்கதில் அவரை ஒரு ஆக்சன் ஹீரோயினாக மாற்றியிருக்கிறது

சரத்குமார் கெஸ்ட் ரோலில் வந்து செல்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் வேகமான ஆக்சன் காட்சிகளில் துடிப்பாக செயல்பட்டு ரசிகர்களை கவர்கிறார்.

மேலும் அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட், ஜெயப்ரகாஷ் போன்றவர்களும் வெவ்வேறு கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்கள்.

எஸ் லட்சுமண் குமார், வினித் ஜெயின் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கின்றனர்

திபு நினன் தாமஸ் இசை ஓகே. அருள் வின்சென்ட் கேமரா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை கண்கொள்ள காட்சியாக படமாக்கியி ருக்கிறது

எஃப் ஐ ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தை ஹாலிவுட் பாணியில்  சொல்ல வேண்டும் என்று ரொம்பவே மெனககெட்டிருக்கிறார். அதே சமயம் வெறும் ஆக்ஷன் கதையாக இல்லாமல் அதில் சென்டிமென்ட்  சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

மிஸ்டர் எக்ஸ் – ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு தமிழ் படம்

Review By

K Jayachandhiran

trending cinemas now.com0p

 

Related posts

பிரசாந்த் – ஹரி இணையும் அதிரடி புதுப்படம்

Jai Chandran

‘ராவடி’ பட ஷுட்டிங் முழுமையாக நிறைவு..

Jai Chandran

Sabhaapathy releasing in theaters near you on Nov 19

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend