Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துப்புரவு பணியாளர்களுக்கு பிரம்மகுமாரிகள் வரவேற்பு

ரக்ஷா பந்தன் விழா முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் சென்னையில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு ராக்கி கட்டி கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை மந்தைவெளியில் உள்ள
ராஐயோக தியான பயிற்சி நிலைய அரங்கில் நடத்தினர்.
இந்நிகழ்வில் 40 துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்பினர் பூச்செண்டு கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். பின்னர் துப்புரவு பணியாளர்களின் பணியில் உள்ள சிரமங்களையும் அதற்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் போக்கினையும் எடுத்து கூறி அவர்களை புகழ்ந்து பேசியதுடன் அனைவருக்கும் பரிசு மற்றும் மதிய உணவு வழங்கினர்.

பின்னர் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ராக்கி அணிவித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பிரம்ம குமாரிகளின் பாராட்டுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து கொண்டனர்.

மயிலாப்பூர் மைய பிரம்ம குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் பி கே சொர்ணலட்சுமி,  கோஆர்டினேட்டர் பி கே சரோஜா இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா காதல் திருமணம்..

Jai Chandran

Director James Gunn wants to work with Jr NTR

Jai Chandran

Third look of 335KM launched by RKSelvamani

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend