Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா காதல் திருமணம்..

கன்னடத்தில் 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திடீரென்று ராஷ்மிகா அந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டார் .

அதன் பிறகு ஒன்று இரண்டு கன்னட படங்களில் நடித்த ராஷ்மிகா தனது கவனத்தை தெலுங்கு திரை உலகின் பக்கம் திருப்பினார். விஜய் தேவரகொண்டா உடன் கீதா கோவிந்தம் என்ற படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் டியர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் ராஸ்மிகா ஜோடியாக நடித்தார். அப்போதிலிருந்தே விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவி வந்தது. B ஆனால் அதனை இருவரும் உறுதி செய்யாமல் இருந்தனர்.

பூனைக்குட்டி வெளியில் வந்தது போல் ஒரு கட்டத்தில் அவர்களது காதல் அம்பலப்பட்டு போனது. குடும்பத்தினருக்கு இந்த விவகாரம் தெரிந்ததையடுத்து அவர்கள் இருவரது சம்மதத்தையும் கேட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அரண்மனை நகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தானில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் விஜய் தேவர கொண்டா ராஷ்மிகா திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பல கோடி செலவில் திருமணத்திற்கான அலங்காரங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு (ஆந்திரா) பாரம்பரிய முறையில் தாலி கட்டும் வைபவம் நடைபெற்றது. பின்னர்
ராஷ்மிகாவின் பூர்வீகமான கூர்க் (Kodava) கலாச்சார முறையில் திருமண சடங்குகள் நடைபெறுகின்றன. இதில் பாரம்பரிய கொடவா சேலை அணிந்து ராஷ்மிகா கலந்துகொண்டார்.
திருமண விழாவில் சங்கீத் நிகழ்ச்சி ஹைலைட்டாக அமைந்தது. புஷ்பா படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற  சாமி ஐயா சாமி பாடலுக்கு ராஷ்மிகா நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தினார்

விஜய் தேவரகொண்டாவின் தாய் , ராஷ்மிகாவுக்கு குடும்ப பாரம்பரிய தங்க வளையல்களை பரிசாக வழங்கினார். திருமணத்திற்கு முன்னதாக நண்பர்களுக்காக ‘Virosh Premier League’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி, பூல் வாலிபால் போட்டி நடத்தப்பட்டன.
விஜய் தேவர் கொண்டா, ராஸ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் விரைவில் வெகு விமர்சையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் ஹாட்ரிக் போட்டோ ஷூட்

Jai Chandran

சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி

Jai Chandran

தந்தை பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend