Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

எஸ்பிபி கூட்டுபிரார்த்தனையில் திரண்ட திரையுலகம்.. இயக்குனர் பாரதிராஜா உருக்கம்

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடையவேண்டி திரையுலகினர் திரண்டு  பாரதிராஜா கேட்டுக்கொண் டதற்கிணங்க  கூட்டுபிரார்த்தனையில் பங்கேற்றனர்.

இதுபற்றி பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

என் இனிய தமிழ் மக்களே..
பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து  பூரண நலம் பெற உலகெங்கும் நடைப்பெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு உறுதுணையாக இருந்து, பிரார்த்தனையில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி , தமிழக அமைச்சர் பெரு மக்கள், எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன், புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழக அரசியல் கட்சி  பெருமக்கள் எங்கள் கலைத் துறையில் நண்பர்கள்
இளையராஜா, ரஜினிகாந்த், வைரமுத்து, சிவக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், கங்கை அமரன், டி.ராஜேந்தர், சத்யராஜ், பிரபு, கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆர்.கே செல்வமணி, சரத்குமார், பாக்யராஜ், விக்ரமன், கே.எஸ் ரவிக்குமார், ஆர்.வி. உதயகுமார், சித்ரா லட்சுமணன், பார்த்திபன், சீமான், சேரன், அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர்பச்சன்
விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, விவேக், கதிர், எஸ்.ஜே சூர்யா, லிங்குசாமி, சீனுராமசாமி, பேரரசு, மனோபாலா, சுப்ரமணிய சிவா, கெளதமன், சுசீந்திரன், பாண்டிராஜ், சரோஜா தேவி, ராதிகா பாடகிகள் எஸ் ஜானகி, ஜென்ஸி, சித்ரா, பாடகர்கள் மனோ, ஹரிஹரன்,
இசையமைப்பாளர்கள்  சங்கர் கணேஷ் தேவா, தினா, இமான்,  ஜி.வி.பிரகாஷ்,  ஸ்ரீகாந்த் தேவா , என்.ஆர் ரகு நந்தன், கவிஞர் கார்க்கி, கவிஞர் கபிலன் வைரமுத்து, மற்றும் திரைப்பட இயக்கு னர்கள், தயாரிப்பாளர்கள், பெப்சி நிர்வாகிகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இசை அமைப்பாளர் சங்கம், திரையரங்க அதிபர்கள், விநியோகஸ் தர்கள், ரஜினி மக்கள் மன்றம்,  நாம் தமிழர் கட்சி உறவுகள், விஜய் ரசிகர் மன்றம், தனுஷ் ரசிகர் மன்றம், சூர்யா & கார்த்தி ரசிகர் மன்றங்கள், சிம்பு ரசிகர் மன்றங்கள் மற்றும் உலகெங்கும் வாழும்  தமிழ் மக்கள், ஊடகத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அனைவரும் சமூக இடைவெளியுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
எஸ்.பி.பி அவர்களும், பொதுமக்களும் கொரோனா பிடியில் இருந்து மீண்டுவர தொடர்ந்து பிரார்த்திப்போம். பொதுமக்க ளுக்கு ஒரு வேண்டுகோள். அரசு வழிகாட்டுதலின் படி அனைவரும் வெளியில் செல்லும் போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் என கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவிலி ருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.
இவ்வாறு பாரதிராஜா அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Related posts

“Good Night’” Team is back with ‘Lover’!

Jai Chandran

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்- இயக்குனர் ராஜூ முருகன்

Jai Chandran

After Kamal , Vijay Sethu gets featured in Burj Khalifa

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend