Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மதுரை ஆதினம் அருணகிரி நாதர் 71 வயதில் காலமானார்: முதல்வர் இரங்கல்

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மதுரை ஆதீனத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் இருந்து வந்தார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77), உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்  பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
சிகிச்சை பலனில்லாமல் நேற்று( ஆகஸ்ட் 14ம் தேதி  2021) சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மதுரை ஆதீனத்தின் உயிர் பிரிந்தது.
அவரது உடல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஆன்மீக பிரமுகர்கள்,
தமிழக முதல்வ மு.க.ஸ்டாலின் ஆதினம் மறைவுக்கு இரங்கள் தெரிவித்தார்.
மேலும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அருணகிரி நாதர்  உடல் மதுரை மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தருமபுர ஆதீனம் மாசிலாமணி சுவாமி உள்ளிட்ட ஆதீனங்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
அருணகிரிநாதர் மரணம் அடைந்ததால் 293-வது ஆதீனமாக இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவி ஏற்கிறார். 10 நாட்கள் கழித்து மதுரை ஆதீன மடத்தில் புதிய ஆதீனம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Related posts

கட்டிலில் தமிழ்பெண்ணாக மாறிய சிருஷ்டி டாங்கே

Jai Chandran

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ஹாஸ்டல்”

Jai Chandran

Shilpa Manjunath joins Natty’s Psycho thriller..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend