Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வாத்தி (பட விமர்சனம்)

படம்: வாத்தி

நடிப்பு: தனுஷ், சமுத்திரகனி, பாரதிராஜா, சம்யுக்தா, சாய்குமார், தணிகலபரணி, தோட்டபள்ளி மது, நர்ரா ஶ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெரேடி, கேன் கருணாஸ், பிரவினா லலிதாபாய், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஷாரா பவிஷ்

தயாரிப்பு: தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்சூன் போர் சினிமாஸ்

இசை: ஜி. வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு:ஜே.யுவராஜ்

இயக்கம்: வெங்கி அட்லூரி

பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்

1990 களில் அரசு பள்ளிகள் மாணவ மாணவிகள் ரொம்பவும் படிப்பில் பின்தங்கியிருக்க தனியார் பள்ளியில் படிப்பவர்கள் அதிக மதிப்பெண் பெற்று முன்னேறுகின்றனர். அரசு பள்ளியை மேம்படுத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். சமுத்திரக் கனி பள்ளியை சேர்ந்த துணை ஆசிரியர் தனுஷ் சோழவரம் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படு கிறார். அந்த பள்ளிக்கு வரும் தனுஷ் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 9, 10ம் வகுப்புக்கு பிறகு கூலி வேலைக்கு செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். எல்லோரையும் நன்கு படிக்க வைத்து உயர் படிப்புக்கு அனுப்ப சபதம் செய்கிறார். அதற்காக மாணவ, மாணவி  களுக்கு கடும் பயிற்சி அளித்து தகுதியானவர்களாக்குகிறார். அதைக்கண்டு அதிர்ச்சி அடையும் சமுத்திரக்கனி தனுஷின் முயற்சியை முறியடிக்க சூழ்ச்சி செய்கிறார். இதில் தனுஷ் வென் றாரா, சமுத்திரக்கனி வென்றாரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பள்ளி வாத்தியாராக நடித்திருக் கிறார் தனுஷ். அரசு பள்ளி மாணவ மாணவிகளை நன்கு படிக்க வைத்து அவர் களை உயர் கல்விக்கு அனுப்ப தனுஷ் எடுக்கும் முயற்சிகளில் முழுஈடு பாடு செலுத்தி நடித்திருக்கிறார்.
அசுரன், கர்ணன் படங்களில் கனமான வேடத்தில் நடித்த தனுஷுக்கு வாத்தியார் வேடம் நடிப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? நடிப்பில் அசத்தியிருக் கிறார்.
பள்ளியிலிருந்து மாற்றப்படும் போது மாணவ மாணவிகள் தனுஷுக்காக போராட்டத்தில் ஈடுபடுவது நிஜ சம்பவத்தின் பிரதி பலிப்பு. மாணவ மாணவிகள் தனுஷுக்கு இடையே நடக்கும் பல நெகிழ்வான காட்சிகள் மனதை உருக்கும்.

தனுஷ் சம்யுக்தா காதல் தென்ற லாக வீசுகிறது.

சமுத்திரக்கனிக்கு வில்லத்தன மான வேடம். ‘கல்வியில் கிடைக்கும் பணம் அரசியலில் கிடைக்காது’ என்று அவர் சொல்லும் வசனங்களில் வில்லத் தனம் புதைந்திருக்கிறது.

என்னதான் தனுஷ், சமுத்திரக்கனி என்றா லும் சில காட்சிகளில் தெலுங்கு வாடை வீசுகிறது. சில தெலுங்கு முகங்கள் வசனங்கள் பேசுவதுகூட தமிழ் வசனங்களாக இருந் தாலும் லிப் சிங்க்கில் தெலுங்கு அசைவுகள் மேலோங்கி யிருப்பது தெரிகிறது.

தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி தமிழ் தெலுங்கு இருமொழியில் படத்தை இயக்கி யுள்ளார். கல்வி எல்லோருக்கும் எவ்வளவு முக்கியம் அவசியம் என்பதை ஆணி அடித்தார்போல் சொல்லியிருக்கிறார்.

ஜி. வி.பிரகாஷ்குமார் இசை காட்சிகளோடு ஒன்றி நிற்கிறது.

ஒளிப்பதிவை தெளிவாக செய்திருக்கிறார் ஜே.யுவராஜ்.

வாத்தி – கல்வி ஊக்கம்.

 

Related posts

NooruKodiVaanavil hits 1M+ views

Jai Chandran

நிறங்கள் மூன்று (பட விமர்சனம்)

Jai Chandran

காட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகர் தேஜ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend